கரும்புலிகள் நாள் 2018 - சுவிஸ்

யூலை 16, 2018

தமிழீழ வீரமிகு விடுதலைப்போரில் தேசிய விடுதலையை மட்டுமே தாரக மந்திரமாக தமக்குள் கொண்டு தமது இறுதி இலக்கில் உறுதி தளராது  எத்தடை வரினும் அதையெல்லாம் உடைத்தெறிந்து  காற்றுப்புகா இடத்திலும் கணையாய் புகுந்த காவலர்களாம் தரை, கடல், வான் கரும்புலிகள் நினைவுசுமந்தஎழுச்சிநிகழ்வானகரும்புலிகள் நாள் 14.07.2018சனிக்கிழமைபேர்ண் மாநிலத்தில் எழுச்சியுடன்நடைபெற்றது.

சுவிஸ் தமிழர்ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வெழுச்சிநிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன், தமிழீழத் தேசியக்கொடி, ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம்,மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. மக்களால் சுடர்,மலர் வணக்கம் செலுத்தப்பட்டவேளையில்இசைக்கலைஞர்களால் எழுச்சிப் பாடல்களும்; வழங்கப்பட்டன.

முதற்கரும்;புலிகப்டன் மில்லர் அவர்களின் 31வது ஆண்டுநினைவுகளைத் தாங்கியதுமான இவ்வெழுச்சிநிகழ்வின் எழுச்சி நிகழ்வுகளாக எழுச்சிப்பாடல்கள்;, எழுச்சிநடனம், கவிதை,சிறப்புரையோடுஎமதுபழம்பெரும் கலையான வில்லுப்பாட்டு  நிகழ்வும்; இடம்பெற்றது.

நிகழ்வின் இறுதியாகநம்புங்கள் தமிழீழம் பாடலைத் தொடர்ந்துதமிழீழத் தேசியக்கொடி இறக்கப்பட்டு, தமிழர்களின் தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் எழுச்சியுடன்; நிறைவுபெற்றன. 

 மக்கள் புரட்சிவெடிக்கட்டும் சுதந்திரதமிழீழம் மலரட்டும் என்றதியாகதீபம் திலீபன் அவர்களின் இலட்சியப் பணியைஅனைவரும் ஒன்றிணைந்து வலுப்படுத்திச்  செயற்படுத்தவும்,  தமிழின அழிப்பிற்குநீதிகேட்டும் ஐ.நா நோக்கி 17.09.2018 திங்கட்கிழமைஅன்றுநடைபெறவுள்ளமாபெரும் பொங்குதமிழ்நிகழ்விற்கு ஜ.நா நோக்கிபொங்குதமிழராய் அணிதிரண்டுதமிழினஅழிப்பிற்குநீதிகேட்கமுரசறைவோம் எனஅனைத்துதமிழ் உறவுகளையும் சுவிஸ் தமிழர்ஒருங்கிணைப்புக்குழுஉரிமையோடு இத்தருணத்தில்  வேண்டிநிற்கின்றது.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு

இணைப்பு: 
செய்திகள்
வியாழன் August 16, 2018

வள்ளிபுனம் செஞ்சோலை சிறுவர் வளாகத்தின் மீது சிறீலங்கா வான்படை 14.08.2006 அன்று மேற்கொண்ட இனவழிப்புத் தாக்குதலில் பலியான 61 மாணவிகளின் 12 வது ஆண்டு நினைவு நாளும் , தமிழீழ மக்களுக்காய் தன் உடலில் தீ

செவ்வாய் August 07, 2018

தமிழினத்திற்கு முகமும், முகவரியும் தந்த தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை ஈன்றெடுத்த அன்னை பார்வதியின் பிறந்த நாளை தமிழீழ தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் உள்ள ஈழத்தமி

வெள்ளி யூலை 27, 2018

 TELO  நடாத்தும் கறுப்பு யூலை நிகழ்விற்கும் எமதமைப்புக்கும் (TCC) எந்த வித தொடர்பும் இல்லை