கறுப்பு ஜுலை நிகழ்வின் பிரதம பேச்சாளராக ஆதிலட்சுமி சிவகுமார்!

யூலை 20, 2018

ரொரண்டோ-அல்பேர்ட் கம்பல் சதுர்க்கத்தில் புதன் கிழமை (ஜுலை 25ம் திகதி) மாலை 6.30 மணிக்கு இடம்பெறும் கறுப்பு ஜுலை நிகழ்வின் பிரதம பேச்சாளராக கலந்து கொள்கின்றார். இவர் முள்ளிவாய்க்கால் இனவழிப்பில் இருந்து மீண்டு முள்ளிவாய்க்கால் அவலத்தை வெளி உலகிற்கு 'புள்ளிகள் கரைந்தபொழுது' என்ற நாவலின் ஊடாக தமிழீழத்தில் வெளியிட்டு, கனடாவில் வெளியிட இருக்கின்றார்.

இவருடைய படைப்பில் இதுவரை பல நாவல்கள் மற்றும் கவிதை தொகுப்புக்கள் வெளிவந்திருக்கின்றது. ஈழநாடு, ஈழநாதம், ஈழமுரசு, முரசொலி உள்ளிட்ட யாழ் பத்திரிகைகளிலும் வெளிச்சம், சிரித்திரன், அமிர்தகங்கை, ஜீவநதி, எரிமலை, காற்றுவெளி உள்ளிட்ட  இன்னும் பல சஞ்சிகைகளிலும் எழுதியுள்ளார். 

1990 ம் ஆண்டிலிருந்து 2009 வரை தமிழீழ தேசிய வானொலி மற்றும் தமிழீழ தொலைக்காட்சியில் இவருடைய படைப்புக்கள் பல வெளிவந்திருக்கின்றன. இவர் தமிழ் தேசியத்தின் உச்ச விருது பெற்ற ஒரு கலைஞர்.

இவருடைய தாயகப்பாடல்கள் பல இசைத்தட்டுகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய ' விழிமடல் மூடி துயில்கின்ற வீரரே......' என்ற பாடல் அனைவராலும் மிகவும் விரும்பப்பட்டது. 

இன்றும் தொடர்ந்தும் எழுதிக்கொண்டிருக்கும் ஆதிலட்சுமி சிவகுமார் அவர்களுடைய கறுப்பி ஜூலையில் நிகழ்த்தவிருக்கும் பேச்சு தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஒரு உந்து சக்தியாக இருக்கும் என கனடியத் தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தொடர்புகளுக்கு: கனடியத் தமிழர் தேசிய அவை (416.830.7703)
 

ஆவணம்: 
செய்திகள்
வியாழன் August 16, 2018

வள்ளிபுனம் செஞ்சோலை சிறுவர் வளாகத்தின் மீது சிறீலங்கா வான்படை 14.08.2006 அன்று மேற்கொண்ட இனவழிப்புத் தாக்குதலில் பலியான 61 மாணவிகளின் 12 வது ஆண்டு நினைவு நாளும் , தமிழீழ மக்களுக்காய் தன் உடலில் தீ

செவ்வாய் August 07, 2018

தமிழினத்திற்கு முகமும், முகவரியும் தந்த தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை ஈன்றெடுத்த அன்னை பார்வதியின் பிறந்த நாளை தமிழீழ தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் உள்ள ஈழத்தமி

வெள்ளி யூலை 27, 2018

 TELO  நடாத்தும் கறுப்பு யூலை நிகழ்விற்கும் எமதமைப்புக்கும் (TCC) எந்த வித தொடர்பும் இல்லை