கறுப்பு ஜுலை 1983 ஆண்டு இனப்படுகொலை! -பிரித்தானியா

Tuesday July 24, 2018

ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டு. பெரும் எண்ணிக்கையானவர்கள் காயமடைந்தார்கள். தலைநகர் கொழும்பு மற்றும் நாட்டின் தென்பகுதி நகரங்களில் தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் அடித்து நொருக்கப்பட்டு தீ வைக்கப்பட்டன. தமிழர்களுக்குச் சொந்தமான ஏராளமான வீடுகள், கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டன. வீதிகளில் வாகனங்கள் மறிக்கப்பட்டு தமிழர்கள் இருக்கின்றார்களா என்று தேடித் தேடி சிங்கள வெறியர்கள் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள் சிங்களதேசத்தில் இருந்து தமிழர் பிரதேசங்களுக்கு அகதிகளாக அனுப்பப்ட்டனர். இந்த நிலை இன்றும் தொடரும் நிலையில்
 
பிரித்தானிய பிரதமர் காரியாலயத்திற்கு முன்பாக பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் ஒழுங்கமைக்கப்பட்ட கறுப்பு ஜுலை நிகழ்வு  மக்களின் கனத்தமனதோடு நினைவு கொள்ளப்பட்டது. அகவணக்கத்தோடு நிகழ்வானது ஆரம்பிக்கப்பட்டு , நினைவு சுடர் ஏற்றலோடு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார்கள். தொடர்ந்து நினைவுரைகள், நினைவெழுச்சி கவிதைகள் மற்றும் கொட்டொலிகள் முழங்கி பதாகைகள் தாங்கி இலங்கை அரசுக்கெதிரான கோசங்களை எழுப்பி , தமிழீழம் கிடைக்கும் வரை தொடர்ந்தும் பயணிப்போம் என்ற உறுதிமொழியோடு நிகழ்வானது நிறைவு பெற்றது.