கறுப்பூ யுலை நினைவு கூர்தலும் சிட்னி தமிழ் நடுகல் திறப்பு நிகழ்வும்

திங்கள் ஜூலை 27, 2015

அவுஸ்திரேலியா சிட்னி மாநகரில், உலகில் இரண்டாவது பாரிய யுத்த நினைவு மயானத்தை உள்ளடக்கிய றூக்வூட் மயான நிலையத்தில், தமிழீழ மண்ணின் மைந்தர்களை நினைவுகூரும் முகமாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியின் முன்னறலில் கறுப்பு யூலை இனப்படுகொலை நினைவுநாளும், நடுகல் திறப்பு நிகழ்வும் நடைபெற்றது.

 

பி.பகல் 2.00 மணி தொடக்கம் 4.00 மணிவரை பல நூற்றுக்கணக்கான தமிழர்கள்  தங்களது இழந்த உறவுகளையும், அதனைத் தொடரந்து இன்றுவரை சிறிலங்கா அரசினால் தொடர்ந்தும் அழிக்கபட்டுவரும் அனைத்து மக்களையும் நினைவில் நிறுத்தி மலர்அஞ்சலி செலுத்தினார்கள்.


மலர் அஞ்சலியை திருமதி கிருஸ்ணா nஐகதீஸ்வரன் ஆரம்பித்து வைத்தார். அதனைத்தொடர்ந்து மேஐர் சலிமின் அன்புச் சகோதரியும் பிரபல வானோலி அறிவிப்பாளருமான திருமதி சோனா பிரின்ஸ் அவர்கள் உணர்வுபூர்வமாக யூலை 83ல் படுகொலை செய்யபட்ட அனைத்து மக்களையும் சிறையில் கொடூரமாக படுகொலை செய்யபட்ட போராளிகளையும் மக்களை நினைவில் சுமந்து உரையாற்றினார்.


அடுத்ததாக தமிழீழத்தில் எமது மண்ணும் மக்களும் அழிக்கப்பட்ட காலத்தில் இருந்து இன்று வரை எமக்காக குரல் கொடுத்துவரும் ஒரே ஒரு கட்சியாகிய  Australian Greens party Senator for NSW சார்ந்த Lee Rhiannon அவர்கள் உரையாற்றினார்.


செல்வி யதுகிரி லோகதாசன் அவர்கள் கறுப்பு யூலையை பற்றிய பாடலை மிகவும் உணர்வூபூர்வமாக தனிய இனிய குரலில் வழங்கினார். தொடர்ந்து தமிழ் இளையோர் அமைப்பின் உறுப்பினரான செல்வன் சுஐன் அவர்கள் உரையாற்றினார்.


இறுதியாக உறுதிமொழியுடன் கறுப்பு யூலை இனப்படுகொலை நினைவு நிகழ்வும் நடுகல் திறப்பு நிகழ்வும் நிறைவுபெற்றது.