கல்முனை வடக்கு தமிழ் பிரதேச சபையை தரமுயர்த்தித்தர வேண்டும்!

December 07, 2017

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச சபையை தரமுயர்த்தித்தர வேண்டும் என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டள்ளது.

 நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றிய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

 பாதீட்டில் முன்வைக்கப்படுகின்ற திட்ட முன்மொழிவுகள் சரியான முறையில் நடைமுறைபடுத்தப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

 வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அரசாங்க தொழில் வாய்ப்புக்களை வழங்க உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கோரியுள்ளார்.

செய்திகள்
வெள்ளி December 15, 2017

சாவகச்சேரி நகர சபைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் தெரிவில் தமிழரசுக் கட்சியினருக்கு இடையில் கட்சித் தலைமையகத்தில் நேற்று(14) ஏற்பட்ட கடும் வாக்குவாதம் அடிதடிவரை சென்றுள்ளது.