கல்வி என்பது கற்றல் மட்டுமல்ல கற்பித்தலும் ஆகும்!

புதன் மார்ச் 14, 2018

கல்வி என்பது கற்றல் மட்டுமல்ல கற்பித்தலும் ஆகும் ;என கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் கூறியுள்ளார். இன்று (14) கொழும்பு இசிபத்தன கல்லூரியில் நடைபெற்ற நீச்சல் தடாகத் திறப்பு விழாவில் பங்கேற்கும் போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து உரையாற்றுகையில், மாணவர்கள் கல்விக்கு அப்பாற்பட்ட மேலதிக விடயங்களையும் தேடி அறிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும் எனவும் ஆகையினாலேயே, விளையாட்டு மாணவர்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது எனவும், தெரிவித்தார்.

மேலும் இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் உட்பட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஆகியோரும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.