கழுத்து வலியை உருவாக்கும் மொபைல் போன்!!

திங்கள் சனவரி 28, 2019

நம் கையில் எப்போதும் ஒட்டிக் கிடக்கிறது செல்போன் நமது உடலின் ஒரு அங்கம் என்று கூட சொல்லலாம்.

கம்ப்யூட்டர் பயன்பாட்டுக்கு வந்த புதிதில் இளவயதினர் இடுப்பு வலிக்கு ஆளாயினர். மொபைல் போன் வந்தபிறகு இளவயதினருக்கு கழுத்துவலி வரத் தொடங்கி இருக்கிறது.

தலையின் சராசரி எடை சுமார் 5 கிலோ. செல்போன் திரையை பார்க்க கீழ்நோக்கி குனியும்போது கழுத்தின் மீது தலை செலுத்தும் விசையின் அளவு கூடுகிறது.

குனியும் கோணத்துக்கு ஏற்ப தலையின் அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால் கழுத்து தசைகள் களைப் படைந்து கழுத்து வலி, தோல் பட்டைவலி, தலைவலி உண்டாகிறது.

அழுத்தம் காரணமாக ஜவ்வுகள் வெளியே துருத்தி வந்து கை நரம்புகளை அழுத்துவதால் கை குடைச்சல் மற்றும் நரம்பு தளர்ச்சி ஏற்படுகிறது. இளம் வயதிலேயே எலும்பு தேய்வதும் நடக்கிறது.

தடுப்பதற்கான வழிகள்:

* அதிக நேரம் செல்போன் பயன் படுத்துவதை தவிர்க்க வேண்டும். அரைமணி நேரத்துக்கு ஒரு முறை பிரேக் எடுத்துக் கொள்ள வேண்டும்.

* மிக முக்கியமாக செல்போனை முகத்துக்கு நேராக வைத்து பார்க்க வேண்டும். கீழே குனிந்து பார்ப்பது நல்லதல்ல.

* படுத்துக்கொண்டு செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

* கழுத்து தசைகளை பயிற்சிகள் செய்து ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும்.