காங்கிரசில் உறுப்பினரா? இல்லையா?

ஒக்டோபர் 13, 2017

காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக இருக்கிறீர்களா? இல்லையா? என்ற கேள்விக்கு டெல்லியில் குஷ்பு பதில் அளித்தார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பு டெல்லியில் நேற்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ராகுல் காந்தியை சந்தித்து தமிழ்நாட்டில் நடக்கும் விஷயங்கள் பற்றி பேசினேன். கட்சியில் என்ன மாற்றங்கள் வந்தால் நன்றாக இருக்கும் என்பதையும் கூறினேன். ராகுல்காந்தி உற்சாகமாக இருக்கிறார்.

இளைஞர் காங்கிரசில் உடனடியாக மாற்றங்கள் வரப்போகிறது. சில பணிகளை எனக்கு ராகுல் காந்தி தந்திருக்கிறார். அதை செய்து கொடுக்க வேண்டும். அவர் தலைவராக நியமிக்கப்பட்டால் ரொம்ப சந்தோஷப்படுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர், ‘தமிழ்நாட்டில், காங்கிரஸ் கட்சியில் நீங்கள் உறுப்பினராகவே இல்லை என்று கூறுகிறார்களே?’ என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு குஷ்பு அளித்த பதிலில், யார் இந்த கேள்வியை எழுப்புகிறார்களோ? அவர்கள் அதை உறுதி செய்துவிட்டு வந்தால் நன்றாக இருக்கும். உறுப்பினராக இல்லாவிட்டால் இந்த அளவுக்கு நான் எப்படி பேச முடியும்? ஒரு செய்தி தொடர்பாளராக எப்படி என்னால் செயல்பட முடியும்? ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைவராக இருந்தபோது நான் உறுப்பினர் ஆனேன். 2019-ம் ஆண்டு வரை அந்த உறுப்பினர் அட்டைக்கு காலக்கெடு உள்ளது. கேள்வி எழுப்புகிறவர்கள் தங்களது வேலையை எப்படி செய்கிறார்கள் என்பது இதன் மூலம் தெளிவாகிறது என்றார்.

செய்திகள்
ஞாயிறு செப்டம்பர் 23, 2018

ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த ஆய்வுக்குழு தலைவர் தருண் அகர்வாலா, அதிக மக்கள் ஆலைக்கு எதிராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.