காடுகளை அழித்து சட்டவிரோத குடியேற்றங்களை அமைக்க வேண்டாம்

யூலை 17, 2017

காடுகளை அழித்து சட்டவிரோத குடியேற்றங்களை அமைக்க வேண்டாம் என வலியுறுத்தி முல்லைத்தீவில் நேற்று (16) போராட்டம் நடத்தப்பட்டது.

சட்டவிரோத குடியேற்றங்களை எதிர்க்கும் இளைஞர் அணி என்ற அமைப்பு இந்த போராட்டத்திற்கான அழைப்பை சமூக வளைத்தலங்கள் ஊடாக விடுத்திருந்தது. இதற்கமைய முல்லைத்தீவு முள்ளியவளை – காட்டா விநாயகர் ஆலய சந்தியில் அதிகளவிலானவர்கள் இன்று முற்பகல் கூடினர். போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, உள்ளிட்ட சில அரசியல்வாதிகளும் வருகைதந்திருந்னர்.

எனினும் ஏற்பாட்டாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அவர்கள் போராட்டத்தில் கலந்துகொள்ளாது திரும்பிச் செல்ல நேரிட்டது. முள்ளியவளையிலிருந்து சுமார் 5 கிலோமீற்றர் தொலைவிலுள்ள உத்தேச, கூழாமுறிப்பு குடியேற்றப் பகுதி வரை கண்டனப் பேரணியும் முன்னெடுக்கப்பட்டது. இயற்கை சமநிலையைக் குழப்பும் விதமாக காடுகளை அழித்து சட்டவிரோதமாக குடியேற்றங்களை அமைக்க வேண்டாம் என இதன்போது வலியுறுத்தப்பட்டது. கூழாமுறிப்பு பகுதியில் உத்தேச குடியேற்றத் திட்டத்திற்கான காணிகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கை கடந்த 5 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, கடந்த திங்கட்கிழமை கூழாமுறிப்பு காணிப்பிரச்சினை தொடர்பில், முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது. இதன்போது ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளால் வடமாகண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் ஆகியோர் கூட்டத்தில் இருந்து வெளியேறினர். முல்லைத்தீவு மாவட்டத்தில் காணிகளை கையகப்படுத்தும் முயற்சிக்கு எதிராக கடந்த காலங்களிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டிருந்தன.

செய்திகள்
புதன் யூலை 26, 2017

 தமிழ் நாட்டில் இருந்து நாடு திரும்பும் ஈழ அகதிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன் யூலை 26, 2017

இலங்கை போக்குவரத்துச் சபை மட்டக்களப்பு சாலைக்குச் சொந்தமான பேருந்து, அம்பாறை –கல்முனை வீதியிலுள்ள மல்வத்தை எனுமிடத்தில் குடை சாய்ந்து விபத்துக்குள்ளானதில் 35 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக

புதன் யூலை 26, 2017

கட்டுநாயக்க பண்டரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு எரிபொருள் கொண்டுச்செல்லும் ரயிலை இடைமறித்து கொலன்னாவை பிரதேசத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் 10 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளதையடுத்து அப்பக

புதன் யூலை 26, 2017

வவுனியா - தாலிக்குளம் பகுதியில் சுமார் 30 குடும்பங்களுக்கு இதுவரையில் வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை என தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.