காட்டலோனியா தனிநாடு பொதுவாக்கெடுப்பு சட்டவிரோதமானது

ஒக்டோபர் 04, 2017

ஸ்பெயினில் இருந்து பிரிந்து காட்டலோனியா தனிநாடு கோரி நடைபெற்ற பொதுவாக்கெடுப்பு சட்டத்திற்கு புறம்பானது என ஸ்பெயின் மன்னர் ஆறாம் பெலிப் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் காட்டலோனியா மாகாணம் தன்னாட்சி உரிமை பெற்றுள்ளது, செழிப்பான இப்பகுதி ஸ்பெயினில் இருந்து பிரிந்து தனி நாடு ஆக சுதந்திரம் பெற விரும்புகிறது. 

அதற்கு ஸ்பெயின் அங்கீகாரம் அளிக்கவில்லை. எனவே தனிநாடு கேட்டு கடந்த 5 ஆண்டுகளாக அங்கு போராட்டம் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் ஸ்பெயினில் இருந்து தனி நாடாக வேண்டுமா? அல்லது வேண்டாமா? என்பதை அறிய கடந்த ஞாயிறு அன்று பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 

பொதுவாக்கெடுப்பு சட்டவிரோதமானது என ஸ்பெயின் அறிவித்தாலும், வாக்கு சாவடிகளுக்கு மக்கள் சாரை சாரையாக வந்து வாக்களித்தனர். பலர் முந்தைய நாள் இரவே வாக்கு சாவடியில் வந்து தங்கிவிட்டனர். 

வாக்குப் பதிவு தொடங்கியதும் காவல் துறை  வந்து ஓட்டு பெட்டிகளையும், வாக்கு சீட்டுகளையும் பறித்து சென்றனர். ஓட்டு போட வந்த பெண்கள் மற்றும் ஆண்களை பிடித்து சென்றனர். பெண்களின் தலை முடியை பற்றி இழுத்தனர். 

இதனால் பல இடங்களில்  காவல் துறைக்கும், பொது மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதில் 800-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களில் 12 போலீஸ் அதிகாரிகளும் அடங்குவர். 

இதற்கிடையே பொது வாக்கெடுப்பில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டன. அவற்றில் 90 சதவீதம் பேர் காட்டலோனியாவுக்கு சுதந்திரம் வழங்கவேண்டும் என கோரியுள்ளதாகவும், எனவே பொது வாக்கெடுப்பு வெற்றி பெற்றதாகவும் காட்டலோனியா போராட்ட குழு தலைவர் புயுக்டிமான்ட் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து அந்நாட்டு மக்களிடம் ஊடகம் மூலம் பேசிய மன்னார் ஆறாம் பெலிப், தனிநாடு கோரியவர்கள் அவர்களாகவே வாக்கெடுப்பு நடத்தியது சட்டவிதிமுறைகளுக்கு அப்பாற்பட்டது என்றும், இவ்விவகாரம் மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும் கூறினார்.

மேலும், இந்த சூழ்நிலையில் மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

செய்திகள்
ஞாயிறு ஒக்டோபர் 22, 2017

குர்திஸ்தானின் கேர்க்குக், ரஸ் குர்மாற்றூ ஆகிய நகரங்களில் ஈராக்கிய-ஈரானிய படைகளால் 550 தொடக்கம் 600 வரையான குர்தி மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

சனி ஒக்டோபர் 21, 2017

குர்திஸ்தானில் கடந்த ஆறு நாட்களாக ஈரானிய-ஈராக்கிய படைகள் முன்னெடுத்து வரும் படை நடவடிக்கைகளில் 168,372 குர்தி மக்கள் இடம்பெயர்ந்திருப்பதாக குர்திஸ்தான் மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது.

சனி ஒக்டோபர் 21, 2017

மர்ம நபரால் கடத்தப்பட்ட பாகிஸ்தான் பெண் பத்திரிக்கையாளர் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர்  

சனி ஒக்டோபர் 21, 2017

குர்திஸ்தான் தலைநகர் எர்பில் நோக்கி ஈரானிய துணைப்படைகளின் உதவியுடன், கவச ஊர்திகள் சகிதம் வெள்ளிக்கிழமை ஈராக்கிய படைகள் முன்னெடுத்த வலிந்த படையெடுப்பு முறியடிக்கப்பட்டிருப்பதாக குர்திஸ்தான் மாநில பா

வெள்ளி ஒக்டோபர் 20, 2017

வடகொரியாவுக்குப் போர் மிரட்டல் விடுப்பது அமெரிக்காவுக்குத் தான் பேராபத்து என்று ஹிலாரி கிளின்டன் தெரிவித்துள்ளார்.வடகொரியா அமெரிக்காவை குறிவைத்து அவ்வப்போது அணு ஆயுதம் மற்றும் ஏவுகணைச் சோதனையைநடத்த

வெள்ளி ஒக்டோபர் 20, 2017

நியூசிலாந்தின் புதிய பிரதமராக தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த ஜெசிந்தா அர்டென் பதவியேற்க உள்ளார். மிகக்குறைந்த வயது பெண் பிரதமர் என்ற பெருமையைப் பெறும் ஜெசிந்தாவுக்கு வயது 37.