காட்டு தீ நிவாரண நிதி சேர் நடைபவனி

சனி மே 07, 2016

Fort McMurray காட்டு தீ நிவாரண நிதி சேர் நடைபவனி!

கனடியத் தமிழர் தேசிய அவை (NCCT) யின் அவசர வேண்டுகோள்!

கனடா Fort McMurray யில் ஏற்பட்ட காட்டு தீயினாலான கடுமையாக பாதிக்கப்பட்ட பல கிராமங்களைச் சேர்ந்த 80,000 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களிற்கு கனடிய செஞ்சிலுவை சங்கத்தினூடாக உதவுமாறு கனடிய அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க நிவாரண உதவிகளை வழங்குமுகமாக கனடியத் தமிழர் தேசிய அவை முன்னெடுக்கும் ‘நிதி சேர் நடைபவனி' நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மே 8, 2016 அன்று Markham & Steeles சந்திப்பிற்கருகில் உள்ள பூங்காவின் முன்பிருந்து மாலை 3:00 மணிக்கு ஆரம்பமாக உள்ளது.

அவசர தேவைக்காக ஒழுங்கமைக்கப்பட்ட இந்நிகழ்வில் அனைத்து மக்களும் பெரும் எண்ணிக்கையினராக கலந்து இப்பணிக்கு வலுச்சேர்த்து ஆதரவு நல்குமாறு வேண்டுகின்றோம்.

வீடுகளை இழந்து தற்காலிக வதிவிடங்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் இம்மக்கள் மீண்டும் தம் வாழ்விடங்களுக்கு திரும்புவதற்து பல வாரங்கள் எடுக்கும் என்று அறியக்கூடியதாக இருக்கின்றது.

தமிழர்களின் இனச்சிக்கலுக்கு குரல் கொடுக்கும் கனடிய மக்களின் துயர் துடைக்க தமிழ் கனடியர்களாக இப்பணியை நாம் ஆற்ற வேண்டியது எம் காலக் கடன் என்பதை உணர்ந்து அனைவரும் அணி திரள்வீர்! ஆதரவு நல்குவீர்!

மேலதிக விபரங்களுக்கு: கனடிய தமிழர் தேசிய அவை

தொலைபேசி: (416) 830 - 7703

மின்னஞ்சல்: info@ncctcanada.ca