காணாமற்போனோரின் உறவினர்கள் வியாழனன்று ஜனாதிபதியைச் சந்திப்பர்

நவம்பர் 14, 2017

சிறிலங்கா படையினராலும் ஒட்டுக் குழுக்களாலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். 

இச்சந்திப்பு நாளை மறுதினம் வியாழக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது எனவும் இதற்காக வடக்கே 8 மாவட்டங்களையும் சேர்ந்த 31 பேர் கொண்ட குழுவினர் நாளை புதன்கிழமை கொழும்புக்குச் செல்லவுள்ளனர் எனவும் கிளிநாச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க செயலாளர் குறிப்பிட்டுள்ளார். 

கடந்த மாதம் கிளிநொச்சிக்குச் சென்ற ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்காக நேரம் ஒதுக்க வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. 

இதற்கு விரைவில் பொருத்தமான திகதி ஒன்றை அறிவிப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். அதற்கேற்பவே இந்தச் சந்திப்பு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது எனவும் இதில் சில சாதகமான முடிவுகள் கிடைக்கும் என தாங்கள் எதிர்பார்க்கின்றனர் எனவும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 

செய்திகள்