காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் பிரதிநிதிகள் குழு ஜெனீவா சென்றடைந்தனர்!

June 20, 2018

தமிழர் தாயகத்திலிருந்து வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் பிரதிநிதிகள் குழு ஐ.நா மனிதவுரிமைகள் சபையின் 38வது கூட்டத்தொடரிற்காக ஜெனீவா சென்றடைந்தனர்

கடந்த 18.06.2018 திங்கள் கிழமை தொடக்கம் ஐ.நா மனிதவுரிமைகள் சபையின் 38வது கூட்டத்தொடர் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது. தமிழீழம், தமிழகம் மற்றும் புலம்பெயர் நாடுகளிலிருந்து தமிழ் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களை ஒருங்கிணைத்து தமிழர் இயக்கம் பல இராசதந்திர வேலைத்திட்டங்களையும், கருத்தரங்குகளையும் யெனீவா மற்றும் ஐ.நா மனித உரிமைகள் சபையை மையப்படுத்தி நடாத்திவருகின்றது.

தாயகத்திலிருந்து ஐ.நா மனித உரிமைகள் சபைக்கு வந்திருக்கும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள், தாம் தாயகத்தில் எதிர் நோக்கிய மற்றும் இன்றும் எதிர் நோக்கும் அவலங்களையும், இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கும் கட்டமைப்பு சார் இனவழிப்பினையும் சர்வதேச சமூகத்தின் முன் பறைசாற்றவுள்ளனர். தமிழர் இயக்கம் இதற்காக பல பக்கவறை நிகழ்வுகள், நாடுகளுடனான சந்திப்புக்கள் மற்றும் பிரதான அவையில் உரையாற்றும் ஏற்பாடுகளை தீவிரமாக முன்னெடுத்துவருகின்றது.

ஊடகப்பிரிவு
தமிழர் இயக்கம்

செய்திகள்
திங்கள் யூலை 16, 2018

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு தமிழர் விளையாட்டுத் துறை 25 வது தடவையாக நடாத்தும் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த தடகள விளையாட்டுப் போட்டிகளின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் இன்று (14) பரிசின்