காணாமல் ஆக்கச் செய்யப்பட்டவர்கள் பயங்கரவாதிகள் அல்ல!

யூலை 17, 2017

விசாரணை நடத்தாது எவரும் கைது செய்யப்படவில்லை என காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டி.கே.பீ தசநாயக்க கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ரீதியான காரணிகளின் அடிப்படையிலேயே இந்த கைது மேற்கொள்ளப்பட்டது என சுட்டிக்காட்டியுள்ள அவர் இந்த கைது தொடர்பில் சவால் விடுக்கும் தரப்பினர் மனித உரிமை ஆணைக்குழுவில் இது குறித்து முறைப்பாடு செய்ய முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

பணம் பெற்றுக் கொள்ளும் நோக்கில் கடத்தல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கடத்தல்கள் கப்பம் கோரல்களுடன் கடற்படையினருக்கு எவ்வித தொடர்பும் கிடையாது எனவும், கடற்படையில் பணியாற்றிய சிலரின் தனிப்பட்ட தேவைகளுக்கு அமைய இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கச் செய்யப்பட்டவர்கள் பயங்கரவாதிகள் அல்ல எனவும்  சட்டத்தின் முன் முப்படையினர், காவல்துறையினர் என வேறுபாடு கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

செய்திகள்
புதன் யூலை 26, 2017

 தமிழ் நாட்டில் இருந்து நாடு திரும்பும் ஈழ அகதிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன் யூலை 26, 2017

இலங்கை போக்குவரத்துச் சபை மட்டக்களப்பு சாலைக்குச் சொந்தமான பேருந்து, அம்பாறை –கல்முனை வீதியிலுள்ள மல்வத்தை எனுமிடத்தில் குடை சாய்ந்து விபத்துக்குள்ளானதில் 35 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக

புதன் யூலை 26, 2017

கட்டுநாயக்க பண்டரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு எரிபொருள் கொண்டுச்செல்லும் ரயிலை இடைமறித்து கொலன்னாவை பிரதேசத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் 10 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளதையடுத்து அப்பக

புதன் யூலை 26, 2017

வவுனியா - தாலிக்குளம் பகுதியில் சுமார் 30 குடும்பங்களுக்கு இதுவரையில் வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை என தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.