காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கவனஈர்ப்பு போராட்டம்

June 06, 2017

தாயகத்தில் 100 நாட்கள் தாண்டியும் அரசின் பாராமுகத்தோடும் கண்ணீரோடும் எழுச்சியோடும் நடைபெற்று கொண்டு இருக்கும் மக்கள் எழுச்சி போராட்டங்களுக்கு வலு சேர்க்கும் முகமாக கனடிய மண்ணில் கனடா தமிழ் சமூகமும் கனடா தமிழ் மாணவர் சமூகமும் இணைந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை ரொறொன்றோ நகரின் மத்தியில் டண்டாஸ் சதுர்க்கத்தில் நடத்தவுள்ளனர்.

இடம்: ரொறொன்றோ நகரின் மத்தியில் டண்டாஸ் சதுர்க்கத்தில்

திகதி: வெள்ளிக்கிழமை ஜூன் 9, 2017

நேரம்: மாலை 5:00 மணி முதல் 7:00 மணிவரை

மாற்றின மக்களுக்கான பரப்புரையும் கவனஈர்ப்பு போராட்டமுமான இந்நிகழ்விற்கு கனடா வாழ் அனைத்து மக்களும் ஊடகங்களும் ஆதரவு நல்கி அணி திரண்டு தாயகத்தில் போராடும் எங்கள் உறவுகளின் கண்ணீரை உலகுக்கு எடுத்து சொல்லும் காலப்பணியில் அணி திரளுமாறு அன்போடு வேண்டிக்கொள்கின்றோம்.

இலங்கை அரசு தொடர்ச்சியான அழிவுகளை தமிழர் தேசம் மீது நடத்தி வருகின்றது. அத்துடன் இழைக்கப்பட்ட கொடுமைகளுக்குரிய சர்வதேச விசாரணையை மழுங்கடிக்கும் முகமாக சர்வதேசத்தையும் மனித உரிமை அவையையும் தொடர்ச்சியாக ஏமாற்றி வருகின்றது.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து எவ்வித விசாரணையும் இதுவரை நடத்தப்படவில்லை. சிறைகளுக்குள் விசாரணைகள் ஏதுமின்றி அநீதியாக ஆண்டுக்கணக்காக தமிழ்க் கைதிகள் வஞ்சிக்கப்பட்டு வருகின்றார்கள். சிங்கள குடியேற்றம், சிங்கள பெயர் மாற்றம், சிங்களமயமாக்கல், பௌத்த மயமாக்கல், புத்தர் சிலைகள், புத்த விகாரைகள், என கட்டி தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து பறிக்கும் வன்செயல் தொடர்ச்சியாக இன்னும் இடம் பெற்று வருகின்றது. போதை மருந்து பாவனை, கலாச்சார சீர்கேடுகள் என்பனவற்றை வேண்டுமென்றே கட்டவிழ்த்து விட்டு தமிழ் மக்களின் வாழ்வை சிதைப்பது தொடர்கின்றது.

காணாமல் ஆக்கப்பட்டுதல், கைதுகள், கொலை, கொள்ளை, பாலியல் வன்புணர்வு போன்ற பல கொடும் செயலுக்கு காரணமாக உள்ள அரச படைகள் உடனடியாக வெளியேற வேண்டும்; அத்துடன் அவர்களுக்கெதிரான விசாரணை உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி கனடாவில் கண்டன ஆர்ப்பாட்டம் கனடா வாழ் தமிழ் சமூகம், மாணவர் சமூகத்தினரால் முன்னெடுக்கப்படவுள்ளது.

கனடா வாழ் அனைத்து தமிழ் மக்களும் இந்த கண்டன போராட்டத்தில் கலந்து கொண்டு போராடும் தாயக மக்களோடு தோளோடு தோள் நிற்குமாறு வேண்டுகின்றோம்.

கனடிய தமிழர் சமூகம்; தமிழ் மாணவர் சமூகம்
தொடர்புகளுக்கு: 416.830.7703

செய்திகள்
வெள்ளி May 18, 2018

பிரான்சில் பாரிசுக்கு அண்மையில் உள்ள நகரான ஆல்போர்வில் பகுதியில் கடந்த (15.05.2018) செவ்வாய்க்கிழமை முதன்முதலாக கவனயீர்ப்பு நிகழ்வு ஒன்று இடம்பெற்றிருந்தது.

வெள்ளி May 18, 2018

17.05.2018 அன்று ஐரோப்பிய பாராளுமன்றத்திற்குள் "இலங்கையில் இடம்பெறும் தமிழினவழிப்பும் தமிழர்களின் தேசிய வேணவாவும்" என்ற மாநாடு தமிழர் இயக்கம் மற்றும், தமிழர் ஒன்றியம் பெல்யியம் அமைப்புக்களால் ஏற்பா

வெள்ளி May 18, 2018

உலகத்தமிழர் மனங்களை அழுத்தி நிற்கும் நீங்காத் துயர் நிறைந்த முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி...

வெள்ளி May 18, 2018

முள்ளிவாய்க்கால் தமிழனப் படுகொலையின் 9ம் ஆண்டு நினைவுநாள் 18.05.2018 வெள்ளிக்கிழமை  ஸ்ராஸ்பூர்க் ஐரோப்பிய ஆலோசனை சபை முன்றலில் பி.ப 3.00 மணி தொடக்கம் மாலை 5மணி வரை நடைபெற்றது.
 

வெள்ளி May 18, 2018

தமிழ் மக்களுக்கு நீதி கிட்டும் வரை ஓயப் போவதில்லை என சூளுரைத்துள்ளார்.

வெள்ளி May 18, 2018

மே 18, உலக வரலாற்றில் தமிழ் இனத்தின் இரத்தக் கறை படிந்த நாள், சிங்கள பேரினவாதிகள் ஒன்று சேர்ந்து தமிழ் மக்களை கொத்து கொத்தாக கொன்று குவித்த இறுதிநாளான மே 18 இன்றாகும்.