காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆவேசம்

April 21, 2017

“மீதொட்டமுல்லயில் இறந்தால் மட்டும்தான் உயிர்களா? எமது பிள்ளைகளின் உயிர்களைப்பற்றி அரசாங்கத்திற்கு அக்கறை இல்லையா? பிள்ளைகளை விசாரணைக்காக ஒப்படைக்கும்போது நாங்கள் மட்டும்தானே  கண்கண்ட சாட்சிகள்” என கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்த தகவல்களை வெளிப்படுத்தவேண்டும் எனத் தெரிவித்து, அவர்களது உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று 61ஆவது நாளாகவும் தொடர்ந்துவருகிறது.

குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒருவர் கூறுகையில், “எங்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் இந்த அநீதியினை உலக நாடுகளுக்கு தொடர்ந்தும் வெளிப்படுத்தவே நாம் இந்தப் போராட்டத்தினை முன்னெடுத்துச் செல்கின்றோம்.

சர்வதேச அழுத்தத்துடன் கூடிய விசாரணையே எங்களுக்குத் தேவை. இனியும் இந்த அரசாங்கத்தின் வார்த்தைகளை நம்பமாட்டோம். மாற்று அரசாங்கத்திற்காகவே இந்த அரசினை நம்பினோம் ஆனால் ஏமாற்றி விட்டார்களே” என கவலையுடன் இவ்வாறு தெரிவித்தார்.

செய்திகள்
வெள்ளி செப்டம்பர் 22, 2017

இதுவரை சிங்களவர்களுக்கு எதிரானவர் எனப் பார்க்கப்பட்ட அவர் இப்போது தமிழர்களுக்கு ஆபத்தானவராக மாறிவிட்டார்...