காணாமல் போனோர் அலுவலகங்கள் 12 அமைக்கப்படவுள்ளன!

யூலை 11, 2018

காணாமல் போனோர் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள அலுவலகத்தின் பணி குற்றங்கள் தொடர்பில் விசாரித்து தண்டனை வழங்குவதற்காக இல்லை என்பதுடன், காணாமல் போனவர்களுக்கான நிவாரணங்களைப் பரிந்துரை செய்வதே, அலுவலகத்தின் பிரதான கடமையென்பதுடன், காணாமல் போனவர்களின் உறவினர்களை  இது தொடர்பில் தெளிவுப்படுத்துவது என்பதே எமது பிரதான கடமையென காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரஸ் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (9) இடம்பெற்ற, காணாமல் போனோர் ​அலுவலகம் தொடர்பாக தெளிவுப்படுத்தும் செயலமர்வில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.

“நாடுபூராகவும் காணாமல் போனோர் அலுவலகத்தின் கீழ், 12 பிரதேச அலுவலகங்கள் அமைக்கப்படவுள்ளன. இதில் வடக்கில் 5, கிழக்கில் 3 அலுவலகங்களும் அமைக்கப்படவுள்ளன. ஏனைய நான்கு அலுவலகங்கள் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அமைக்கப்படவுள்ளன. இதற்கென புதிய அலுவலகக் குழுக்கள் நியமிக்கப்படவுள்ளன” என்றார்.

எனினும், சர்வதேசத்தைத் திருப்திபடுத்தவோ, ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில்  இலங்கைக்கு எதிராகவுள்ள குற்றச்சாட்டுகளை சமப்படுத்துவதற்காவவோ இந்த நிறுவனங்கள் அமைக்கபடவில்லை. இந்நாட்டிலுள்ள மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே, இந்த அலுவலகங்கள் அமையப்படவுள்ளன.

வடக்கு, கிழக்கு பிரச்சினைக்குத் தீர்வையும், அந்தப் பிரதேச மக்களை திருப்திபடுத்தவுமே இந்த அலுவலகம் அமைக்கப்படுவதாக பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட போதிலும், இந்தச் சட்டத்துக்கமைய 4 பிரிவினர், இந்த அலுவலகம் ஊடாக தீர்வைப் பெற்றுக்கொள்ளலாம்.

செய்திகள்
திங்கள் யூலை 23, 2018

 பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு உடனடியாக விமான சேவைகள் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் விமான நிலையம் தற்போதுள்ள நிலையிலிருந்தே இந்தச் சேவை தொடங்கப்படும் எனவும்,