காணாமல் போனோர் அலுவலகத்தின் இரண்டாவது சந்திப்பு மாத்தறையில்!

Thursday May 17, 2018

காணாமல் போனோர் அலுவலகத்தின் இரண்டாவது சந்திப்பு மாத்தறை மாவட்ட செயலக அலுவலகத்தில் எதிர்வரும் 19ம் திகதி இடம்பெற உள்ளது. அன்றைய தினம் காலை 09.30 மணிக்கு காணாமல் போனோர் அலுவலகத்தின் அலுவலர்கள் காணாமல் போனவர்களின் உறவினர்களை சந்திக்க உள்ளனர். 

அதேவேளை காலை 11.30 மணிக்கு சிவில் சமூக அமைப்புக்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக காணாமல் போனோர் அலுவலகம் கூறியுள்ளது. காணாமல் போனோர் அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் அதன் முதல் சந்திப்பு கடந்த 12ம் திகதி மன்னார் பிரதேசத்தில் இடம்பெற்றது.