காமினி செனரத் என்னை சந்திக்கவில்லை!

நவம்பர் 14, 2017

4 பில்லியன் ரூபா மக்கள் பணத்தை மோசடி செய்ததாக குற்றம்சுமத்தப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதியின் செயலணி யின் பிரதானி காமினி செனரத் தம்மை சந்தித்ததாக தெரிவிக்கப்படும் தகவல் போலியானதும், அடிப்படையற்றதும் என சட்டம், சமாதானம் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 

4 பில்லியன் ரூபா மக்கள் பணத்தை மோசடி செய்ததாக அவர் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள சாகல ரத்நாயக்க, அந்த தகவல் அடிப்படையற்றது எனவும், பொய்யானது மற்றும் வஞ்சனை மிக்க என அவர் குறிப்பிட்டுள்ளார். 

அதேபோன்று, அவ்வாறான ஒருவருடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்கு தமக்கு எந்தவொரு அவசியமும் இல்லை. அவ்வாறான, கொடுக்கல் வாங்கல்களின் ஊடக தமக்கு எந்தவொரு லாபமும் இல்லை என அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

செய்திகள்
செவ்வாய் செப்டம்பர் 25, 2018

 ஈழத்தீவில் வெளி­யேறிய   62 ஆயி­ரத்து 338 பேருக்கு வெளி­நாட்டுப் பயணத் தடை