கார்ஜ்சார்சல் தமிழ்சங்க இல்ல மெய்வல்லுநர் போட்டி!

April 17, 2018

பரிசின் புநகர் பகுதியில் ஒன்றான கார்ஜ்சார்சல் தமிழ்ச் சங்கம் நடா த்திய மெய்வல்லுனர்போட்டி முதல் தடவையாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (15) பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் விளையாட்டுத்துறையின் அனுசரணையுடன் சிறப்பாக இடம் பெற்றது.

காலை 10.30 மணிக்கு சார்சல் நெல்சன்மண்டேலா மைதான முன்றலில் இருக்கும் லெப்டினன் சங்கரின் நினைவு தூபிக்கு சார்சல் தமிழ்ச் சங்க நிர்வாகி திருமதி ஜெயராஜ் அவர்கள்  மரியாதைச் சுடரினை ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினார். தொடர்ந்து முழவுவாத்திய இசையுடன் விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டனர். பொதுச்சுடரினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகப் பொறுப்பாளர் திரு. பாலசுந்தரம் ஏற்றிவைத்தார்.

தொடர்ந்து பிரான்சு , தமிழீழ தேசியக் கொடிகள் ஏற்றிவைக்கப் பட்டன. பிரான்சு தேசியக் கொடியை சார்சல் தமிழ்ச் சங்க பரப்புரைப் பொறுப்பாளர் திரு.கணேசு அவர்களும் தமிழீழத் தேசியக் கொடியினை சார்சல் சங்கப் பொறுப்பாளர் அவர்களும் ஏற்றி வைத்தனர்.

சார்சல் தமிழ்ச் சங்க கொடியும், இல்லக் கொடிகளும் ஏற்றிவைக்கப்பட்டன. 16.11.2007 அன்று மன்னார் நீலச்சேனையில் இடம் பெற்ற நேரடி மோதலில் வீரச்சவைத் தழுவிக்கொண்ட லெப்டினன் தமிழ் வீரன்  / சிலம்பரசனின் சகோதரி ஈகைச்சுடரினை ஏற்றி மலர் வணக்கம் சொலுத்தினார்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து இல்ல மொய்வல்லுநர் போட்டிகள் ஆரம்பமாகின. ஒலிம்பிக் தீபம் ஏற்றும் வைபவத்தை தமிழர்விளையாட்டுத்துறை முகாமையாளர் திரு இராஜலிங்கம் ஆரம்பித்து வைத்தார். இல்லத் தலைவர்கள், நடுவர்கள் சத்திய பிரமாணம் செய்தனர்.

பிரிகேடியர் சொர்ணம் இல்லம், பிரிகேடியரி பால்ராஜ் இல்லம், பிரிகேடியர் விதுசா இல்லம் என மூன்று பிரிவுகாளாக பிரிக்கப் பட்டு இல்ல மெய்வல்லுநர் போட்டிகள் இடம் பெற்றன.

மூன்று இல்லங்களைச் சேர்ந்த மாணவர்களின் அணிவகுப்பைத் தொர்ந்து மெய்வல்லுநர் போட்டிகளும்,  விநோத உடைப் போட்டியும் இடம் பெற்றன.

இறுதியாக தேசியக் கொடிகளும், இல்லக் கொடிகளும் இறக்கப்பட்டு , நம்புங்கள் தமிழீழம் பாடல் ஒலிபரப்பப்பட்டு தமிழழரின் தமிழீழத் தாயகம் என்ற கோசத்துடன் இரவு 21.00 மணிக்கு.நிகழ்வுக் நிறைவு பெற்றன.

இணைப்பு: 
செய்திகள்
செவ்வாய் April 24, 2018

தியாக தீபம் அன்னைபூபதி அம்மாவின் 30ம்ஆண்டு நினைவு எழுச்சிநாளும்,ஆனந்தபுரத்தில் வீரகாவியமான 

திங்கள் April 23, 2018

அன்னை பூபதியின் முப்பதாம் ஆண்டு நினைவு நிகழ்வும் நாட்டுப்பற்றாளர் தினமும்  பிரித்தானியாவில் இரண்டு இடங்களில் மிக உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளது.

வியாழன் April 19, 2018

இனப்படுகொலைச் சிறிலங்கா சிங்கள அரசின் அதிபர் மைத்திரிக்கு எதிராக லண்டனில்