கார் விபத்தில் பிரதமர் மோடியின் மனைவி காயம்!

புதன் பெப்ரவரி 07, 2018

ராஜஸ்தானில் ஏற்பட்ட கார் விபத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி ஜசோதாபென் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ராஜஸ்தான் மாநிலம் சிட்டிகார் மாவட்டத்தில் பிரதமர் மோடியின் மனைவி ஜசோதாபென் சென்ற கார் இன்று காலை விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஜசோதாபென் காயமடைந்தார். அவருடைய உறவினரான வசந்த்பாய் மோடி உயிரிழந்தாக கூறப்படுகிறது. 

இவர் பாரன் மாவட்டத்தில் நடைபெற்ற உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு குஜராத் திரும்பி கொண்டிருந்த போது விபத்து நடந்துள்ளது. ஜசோதாபெனுக்கு பலத்த காயம் ஏதும் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்தனர். அவரை சிட்டிகாரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஜசோதாபென் தனது சகோதரர் அசோக் மோடியுடன் மெக்சானா மாவட்டத்தில் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.