கிந்தோட்டை பகுதிக்கு தொடர்ந்தும் பாதுகாப்பு!

நவம்பர் 19, 2017

காலி - கிந்தோட்டை பிரதேசத்தில் அண்மையில ஏற்பட்ட குழப்பநிலை தற்போது, முழுமையாக குறைவடைந்துள்ள போதிலும், அப் பகுதிக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை அவ்வாறே வைத்திருக்குமாறு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணித்துள்ளதாக, சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார். 

இன்று, ரணில் விக்ரமசிங்க, சாகல ரத்நாயக்க, வஜீர அபேவர்த்தன உள்ளிட்ட குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விஜயம் செய்திருந்தனர்.  இதேவேளை, சம்பவம் தொடர்பில் விஷேட அறிக்கை ஒன்றை பெற்றுத் தருமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சரான சாகல ரத்நாயக்கவுக்கு கூறியுள்ளார். 

இதனையடுத்து, சாகல, முடிந்தளவு விரைவாக அந்த அறிக்கையை வழங்குமாறு, பொலிஸ் மா அதிபர் பூஜீத்த ஜெயசுந்தரவுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். அத்துடன், மறு அறிவிப்பு வரை அப் பகுதிக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை விலக்கிக் கொள்ளவோ தளர்த்தவோ வேண்டாம் எனவும், அமைச்சர் பொலிஸ் மா அதிபருக்கு தெரியப்படுத்தியுள்ளார். 

மேலும், சமூக வலைத் தளங்களில் இந்த சம்பவம் தொடர்பான பொய்யான பிரச்சாரங்களை மேற்கொள்வதை நிறுத்துமாறும், அதுபோன்ற பொய்ப் பிரச்சாரங்களை நம்ப வேண்டாம் என்றும் அவர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

செய்திகள்
திங்கள் December 11, 2017

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, யாழ்ப்பாணத்தில் இதுவரையில் ஏழு கட்சிகளும்

திங்கள் December 11, 2017

யாழ்ப்பாண நகரிற்கு அண்மையில்  அமைந்துள்ள கத்தோலிக்க தேவாலயம் மீது  இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  இந்த சம்பவம் நேற்று(10)  அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.