கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த உதடுகள்!

வியாழன் சனவரி 10, 2019

மூன்றே முக்கால் கோடி ரூபாய் மதிப்புள்ள வைரங்களை மாடல் அழகியின் உதடுகளில் பொருத்தி ஆஸ்திரேலிய நிறுவனம் புதிய சாதனை படைத்துள்ளது. அந்நாட்டின் சிட்னி நகரில் 1963ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் ரோஷன் டோராப் வைர விற்பனை நிலையம், ஆண்டு விழாவை முன்னிட்டு நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்தது.

இதில் மாடல் அழகி சார்லி ஆக்டேவியாவின் உதடுகளில் 3 கோடியே 78 லட்ச ரூபாய் மதிப்புள்ள 126 வைரக் கற்களை, மேக்கப் நிபுணர் கிளார் மாக் பொறுத்தினார். வைரத்தால் ஜொலித்த உதடுகளை படம் எடுத்து இணையத்தில் பதிவேற்றம் செய்ததோடு, கின்னஸ் சாதனை புத்தகத்திலும், ரோசன் டோராப் நிறுவனம் இடம்பிடித்துள்ளது.

22.92 கேரட் எடை கொண்ட வைரங்களுடன் மின்னிய உதடுகளை பார்க்கையில் பெருமையாக இருந்தது என சார்லி ஆக்டேவியா கூறியுள்ளார்.