கிராபிக்ஸை மேம்படுத்த வழி!

Wednesday February 21, 2018

ஒளிப்படங்களின் தரத்தை மேம்படுத்த போட்டோஷாப் மென்பொருள் கொண்டு பல நுணுக்கங்களைப் பயன்படுத்தலாம். இதேபோலவே, கிராபிஸ் சித்திரங்கள் விஷயத்திலும் போட்டோஷாப் நுணுக்கத்தைப் பயன்படுத்தலாம் என வழிகாட்டுகிறது பிகிசிம்பர்பக்ட் (PiXimperfect) யூடியூப் சேனல்.

அதிகபட்சம் இரண்டு வண்ணங்கள் மட்டும் கொண்ட கிராபிக்ஸ் ஆக்கங்களை அது எப்படி மேம்படுத்துகிறது என காணொளி மூலம் இந்தத் தளம் விளக்கம் அளிக்கிறது. இரண்டுக்கு மேல் வண்ணங்கள் இருந்தால் அதற்கான மாற்று வழியையும் பரிந்துரைக்கிறது.