கிளிநொச்சியல் இராணுவத்தின் சீமெந்துத் தொழிற்சாலை!

August 11, 2017

கிளிநொச்சி மாவட்டம் பொன்னார்வெளிக் கிராமத்தில் இராணுவத்தினரால் சீமெந்து உற்பத்தித் தொழிற்சாலையொன்று நிறுவப்பட்டுள்ளதாக பொன்னார்வெளிக் கிராம மக்கள் தன்னிடம் புகாரளித்துள்ளதாக வடமாகாண மகளிர்விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் குற்றம் சாட்டியுள்ளார்.  நேற்று நடைபெற்ற 101ஆவது மாகாணசபை அமர்விலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபையின் முல்லைத்தீவு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாணசபை உறுப்பினர் ரவிகரனால் முல்லைத்தீவு மாவட்டத்தின் வளங்கள் சூறையாடப்படுவது தொடர்பான பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டது.

குறித்த பிரேரணை தொடர்பாக உரையாற்றும்போதே அனந்தி சசிதரன் குறித்த குற்றச்சாட்டை முன்வைத்தார். இதன்போது, கிளிநொச்சி மாவட்டத்தில் பொன்னார் வெளி கிராமத்தில் கடற்படையின் ஒத்துழைப்புடன் சீமெந்து தொழிற்சாலை ஒன்றை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது தொடர்பாக பொன்னார்வெளி கிராம மக்க ள் தமக்கு முறைப்பாடு கொடுத்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.

கடந்த ஆட்சியில் மேற்படி சீமெந்து தொழிற்சாலையை எதிர்த்தவர்கள் இந்த ஆட்சியில் அதனை ஆதரிக்கிறார்கள் எனவும் கடற்படைக்கும் அதற்கும் தொடர்பில்லை எனவும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவே அதற்கு ஒப்புதல் வழங்கியிருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தவநாதன் அனந்தியின் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

செய்திகள்
வெள்ளி ஒக்டோபர் 20, 2017

சிறீலங்காவில் அரசியல் கட்சிகள், குழுக்கள் மற்றும் வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்தும் வகையில் தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது.

வெள்ளி ஒக்டோபர் 20, 2017

சிறீலங்காப் படைககளின்  பல பிரிவுகளில் ஏற்பட்டுள்ள ஆளணிப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய 7 ஆயிரம் பேரை இணைத்துக் கொள்ள படைத் தலைமையகம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது