கிளிநொச்சியில் பெகோ இயந்திரம் கவிழ்ந்ததில் சிறுவன் பலி!

Thursday January 11, 2018

கிளிநொச்சி - முழங்காவில் - கிருஸ்னண் கோவிலுக்கு அருகில் சென்று கொண்டிருந்த பெகோ இயந்திரம் ஒன்று, பாடசாலை மாணவர் மீது கவிழ்ந்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

நேற்று முன்தினம் மாலை, வீதியால் சென்று கொண்டிருந்த குறித்த மாணவன் மீது, சாரதியின் கட்டுப்பாட்டை மீறிய பெகோ இயந்திரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

அத்துடன், சம்பவத்தில் உயிரிழந்தவர், முழங்காவில் பகுதியைச் சேர்ந்த 14 வயதான ஒருவர் என தெரியவந்துள்ளது. அத்துடன், 40 வயதான பெகோ இயந்திர சாரதி கடும் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.