கிளிநொச்சியில் 15 வயது சிறுமி கடத்தப்பட்டுள்ளார்!

April 21, 2017

15 வயது சிறுமி 13 பேர் கொண்ட மோட்டார் ஊர்திகளில் வந்த குழுவினரால் கடத்தப் பட்டுள்ளார். தர்சனா கோவிந்தசாமி எனும் இந்த சிறுமி  (April 20, 2017) காலை 10 மணியளவில் பிரமந்தனாறு கிளிநொச்சியில் உள்ள தனது வீட்டில் உணவருந்திக் கொண்டிருந்த வேளையிலேயே இக் கொடுரம் நிகழ்ந்துள்ளது.

இவர் உரித்திரபுரத்திலுள்ள மகாதேவா இல்லத்தில் வசித்து கல்வி பயில்பவரெனவும் விடுமுறைக்காக தனது வீட்டுக்கு வந்த வேளையே கடத்தப் பட்டுள்ளார் எனவும் தெரிய வந்துள்ளது. மோட்டார் ஊர்திகளில் வந்தவர்கள் அனைவரும் தம் முகங்களுக்கு துணி கட்டியிருந்ததால் அடையாளம் காணப்படவில்லை.

இவரின் குடும்பத்தினர் தர்மபுரம் காவல் நிலையம் சென்று முறையிட்ட போதும் காவல்துறையினர் எந்த நடவிடிக்கையும் எடுக்காதது கவலைக்குரியது. இவ்வாறான பாதுகாப்பற்ற சூழ்நிலையில் எம் சிறுமிகள், பெண்கள் எப்படி நடமாடுவது?

இவரின் குடும்பத்தினர் செய்வதறியாது மக்கள் உதவியை நாடியுள்ளனர். இந்த செய்தியை முடிந்த வரை அனைவருக்கும் தெரியப் படுத்துவதோடு சிறுமியை கண்டு பிடித்து பாதுகாப்பாக குடும்பத்தினரிடம் சேர்க்க உதவிடுங்கள்.

விபரம் தெரிந்தால் அழைக்க வேண்டிய தொலைபேசி எண்: 0775376875 செல்வி (தாயார்)

0776436034 கவிராஜ் (சகோதரன்)

இணைப்பு: 
செய்திகள்
புதன் January 17, 2018

ஆயுதத்தைசிறிலங்கா இறக்குமதி செய்தவரைக் கண்டுபிடித்தால், லசந்தவின் கொலையின் மர்ம முடிச்சுக்கள் பலவும் அவிழும்

புதன் January 17, 2018

புனர்வாழ்வு வழங்கப்பட்ட முன்னாள் போராளிகளில் தனியார் துறையில் பணியாற்றி வருவோருக்கு 10 ஆயிரம்