கீர்த்தி சுரேசுக்கு குரல் கொடுக்கும் பானுப்பிரியா!

Tuesday March 20, 2018

தென் இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை பானுப்பிரியா, நடிகையர் திலகம் படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு குரல் கொடுத்திருக்கிறார். 

தென் இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பானுப்பிரியா. ஏராளமான படங்களில் நாயகியாக நடித்த இவர் திருமணத்துக்கு பிறகு குணச்சித்ர வேடங்களில் நடித்து வந்தார்.

தமிழில் கடைசியாக ‘சிவலிங்கா’, ‘மகளிர் மட்டும்’ படங்களில் நடித்தார். டி.வி. தொடர்களிலும் நடித்தார். இந்த நிலையில், ‘டப்பிங்’ கலைஞராக பானுப்பிரியா மாறி இருக்கிறார்.

பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரிலும், தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரிலும் திரைக்கு வர இருக்கிறது. மே மாதம் 9-ந் திகதி இந்த படம் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 தற்போது இந்த படத்தின் ‘டப்பிங்’, இசை சேர்ப்பு மற்றும் தொழில் நுட்ப பணிகள் நடந்து வருகின்றன. இதில் பானுப்பிரியா ‘டப்பிங்’ பேசி வருகிறார். 

கீர்த்தி சுரேஷ் சாவித்ரியாக நடித்திருக்கும் இந்த படத்தில் அவருக்குத்தான் பானுப்பிரியா குரல் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. சாவித்ரி குரலுடன் பானுப்பிரியாவின் குரலும் ஒத்துப் போகும். எனவே, கீர்த்தி சுரேசுக்கு குரல் கொடுக்க பானுப்பிரியாவை அழைத்து இருக்கலாம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.