குடிவரவு மற்றும் குடியகல்வு உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க போராட்டம்!

Thursday May 17, 2018

புதிய யாப்பு ஒன்றை உருவாக்குவது உள்ளிட்ட கோரிக்கைகள் சிலவற்றை முன்னிறுத்தி இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு உத்தியோகத்தர்களின் சங்கம் நேரத்திற்கு மாத்திரம் வேலை செய்யும் போராட்டத்தை ஆரம்பிப்பதாக அறிவித்துள்ளனர். 

இன்று நள்ளிரவு முதல் இந்தப் போராட்டத்தை ஆரம்பிக்க உள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.  இந்தப் போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னதாக விமான நிலையத்தின் முன்னால் அமைதியான எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை அவர்கள் மேற்கொண்டிருந்தனர்.