குணசீலன் ஆசிரியருக்கு உயர் விருது!

April 11, 2017

கனடாவில் நடந்த இகுருவியின்  மாபெரும் விருது விழாவில் இலங்கையில் புகழ்பூத்தஆசிரியர் குணசீலன் சின்னத்தம்பி அவர்களுக்கு சமூதாய சிற்பி எனும் உயர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. சுமார் ஆயிரத்து இருநூறுக்கும் அதிகமாக தமிழ் வர்த்தகர்கள் , வைத்தியர்கள் , அரசியல் தலைவர்கள்; அடங்கிய மாபெரும் அரங்கில் இந்நிகழ்வு நடைபெற்றது .

இது தொடர்பாக அவர் தெரிவிக்கும் போது , இது தனக்கு வழங்கப்பட்டதாக தான் கருதவில்லை , தாயகத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட அதி உயர் விருதாக கருதுவதாக தெரிவித்தார்.

ஆசிரியர்கள் தான் ஒரு சமூகத்தை உருவாக்குகின்ற பாரிய பொறுப்பை சுமந்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் சமூகத்தின் இன்றைய வளர்ச்சி என்பது அப்பணிப்பான ஆசிரியர் சமூகத்தால் ஏற்பட்டது என்பதை மறந்து விடவோ, மறுத்து விடவோ முடியாது.

மூன்று சகாப்தமாக தொடர்ந்த யுத்தமும், அது ஏற்படுத்திய, ஏற்படுத்தி நிற்கும் உளவியல், பொருளியல் தாக்கங்களும் எங்கள் ஆசிரியர் சமூகத்தையும் விட்டு வைக்கவில்லை.

எங்கள் எதிர்கால சமூகம் உயிர்ப்புடனும், துடிப்புடனும் எழுந்து நிற்பதற்கும், சிகரங்கள் தொடுவதற்கும் ஆசிரியர் சமூகத்தின் பணி இன்றியமையாதது.

யாழ்குடா நாட்டில் பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு கலங்கரை விளக்கமாக திகழ்ந்த ஆசிரிய பெருந்தகை சின்னத்தம்பி குணசீலன்,

 தனி மனிதனாக எமது சமூகத்திற்கு ஆற்றிய, ஆற்றிவரும் பணிகள் மிக மகத்தானது. திரு. சின்னத்தம்பி அவர்கள் தமிழீழத்தின் அனைத்துப் பகுதிகளிலும் புகழ்பூத்த தாவரவியல் ஆசானாக விளங்குவதுடன் ஆசிரியர் சேவை தரம் 1 ற்குப் பதவி உயர்த்தப்பட்டு தற்பொழுது கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் உயிரியல் பாடத்திற்கான சிரேஸ்ட விரிவுரையாளராகக் கடமையாற்றி இதுவரை  சுமார் 40,000 க்கும் அதிகமான மருத்துவ கலாநிதிகள், பல் வைத்திய கலாநிதிகள், விலங்கு மருத்துவ கலாநிதிகள், விவசாய   சிறப்புப் பட்டதாரிகள், விஞ்ஞானப் பட்டதாரிகள் எனப் பல கல்வியாளர்களை உருவாக்கிய பெருமைக்குரியவராக விளங்கும் திரு. சின்னத்தம்பி குணசீலன் அவர்களுக்கு சமுதாய சிற்பி  விருதை வழங்கி கெளரவித்தது இகுருவி.

செய்திகள்
வெள்ளி நவம்பர் 17, 2017

தமிழீழ நினைவுகளை தாங்கிய சிறப்பு வெளியீடுகள்  வழமைபோன்று இவ் ஆண்டும் மாவீரர் நாளன்று  வெளிவருகின்றன.

வெள்ளி நவம்பர் 17, 2017

மாவீரர் மாதமான கார்த்திகை மாதத்தை முன்னிட்டு, மாவீரர்  வாரத் தொடக்க நாளான  கார்த்திகை 20.11.17 முதல் 27. 11.17 வரை இந்து ஆலயங்களிலும்.  தேவாலயங்களிலும்.

வியாழன் நவம்பர் 16, 2017

குறித்த நினைவுத் தூபி மாவீரர்களின் தியாகங்களையும் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாறுகளையும் வேண்டுமென்றே கொச்சைப்படுத்தியுள்ளது...

வியாழன் நவம்பர் 16, 2017

நெருக்கடியான காலகட்டங்களில் உண்மைகளை வெளிக்கொண்டுவர துணிச்சலோடு செயற்பட்ட ஓர் சிறந்த ஊடகப் போராளி...

புதன் நவம்பர் 15, 2017
தமிழின அழிப்பை எதிர்கொள்ளலும், நினைவுகூரலும் என்ற தொனிப்பொருளுடன் கடந்த 04.11.2017 சனிக்கிழமை பிரித்தானியத் தலைநகர் இலண்டனில் சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தால் அரசறிவியல் மாநாடு வெகு சிறப்பு
செவ்வாய் நவம்பர் 14, 2017

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு , தமிழர் கலை பண்பாட்டுக்கழகம் வருடாந்தம் நடாத்தும் மாவீரர் நினைவு