குப்பைகளை வெளியேற்ற வர்த்தமானி அறிவித்தல்

April 21, 2017

அனைத்து உள்ளுராட்சி மன்றங்களிலும் குப்பைகளை வெளியேற்றும் நடவடிக்கையை அத்தியாவசிய சேவையாக மாற்றும் வகையிலான விசேட வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிடுவதற்கு  சிறீலங்கா ஆட்சியாளர்   மைத்திரிபால சிறிசேன உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த வர்த்தமானி அறிவித்தல் (2017.04.20) நள்ளிரவு  அமுல்படுத்தப்பட்டது..இதன்படி, அனைத்து உள்ளுராட்சி மன்றங்களின் ஊடாகவும் நடைமுறைப்படுத்துகின்ற குப்பைகளை வெளியேற்றுதல், கொண்டு செல்லுதல், தற்காலிகமாக களஞ்சியப்படுத்தல், தயாரித்தல், கொட்டுதல் ஆகிய சேவைகள் இந்த வர்த்தமானி அறிவித்தல் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த நடவடிக்கைகளை தவிர்த்தல், அழுத்தங்களை பிரயோகித்தல், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்படல் போன்ற செயற்பாடுகள் தண்டனைக்குரிய குற்றம் என இந்த வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இந்த நடைமுறையை பின்பற்றாதவர்களை பிடியாணை இன்றி கைது செய்து, நீதிமன்றத்தின் ஊடாக சிறைத் தண்டனை வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள்
வியாழன் May 24, 2018

விலகிய 16 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களும், கூட்டு எதிர்க்கட்சிக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.