குப்பை இராணுவம் அள்ள வராது!

June 19, 2017

குப்பை முகாமைத்துவ வேலைத்திட்டத்துக்கு இராணுவத்தினரின் உதவி பெறப்படுகின்ற போதிலும், குப்பைகளைச் சேகரிக்கும் பணிகளுக்கு, படையினரை ஒருபோதும் ஈடுபடுத்தப்போவதில்லை என்று, இராணுவத் தலைமையகம் நேற்று(18) அறிவித்தது.   

நாளாந்தம் குப்பைகள் அதிகமாகக் குவிக்கப்படும் இடங்கள் தொடர்பில், உள்ளூராட்சி மன்றங்களுக்கு அறிவிக்கும் செயற்பாட்டில் மாத்திரமே, படையினர் ஈடுபடுத்தப்படுவர் என்று, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்தார்.

இதற்காக, கொழும்பு மற்றும் கொழும்பை அண்டிய பிரதேசங்களின் கண்காணிப்புப் பணிகளுக்கான இராணுவக் குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்த பேச்சாளர், சட்டவிரோதமான முறையில் குப்பைகளைக் கொட்டும் நபர்களைக் கைது செய்வதற்காக, காவல்துறையினரால்  விசேட நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

அதற்காக, சிவில் ஆடைகளில் காவல்துறை  உத்தியோகஸ்தர்கள் ஈடபட்டுள்ளதாகவும் அவர்களுக்குத் தேவையான ஒத்துழைப்புகளை, இராணுவத்தினர் வழங்குவர் என்றும், இராணுவப் பேச்சாளர் மேலும் கூறினார்.

செய்திகள்
சனி June 24, 2017

 13 ஆவது திருத்தச் சட்டத்தில் இருந்து நிரந்த அரசியல் தீர்வு நோக்கிச் செல்ல வேண்டும் - கர்தினால் பேராயர் மல்கம் ரஞ்சித் 

சனி June 24, 2017

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 8ம் மருத்துவ கண் சம்மந்தப்பட்ட நோய் மருத்துவ விடுதியாகும் இது ஆண், பெண் நோயாளர் கலந்து சிகிச்சை பெறும் விடுதியாகும்.

சனி June 24, 2017

 மண்முனை தென்எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்திக்கு உட்பட்ட செட்டிபாளையம் வடக்கு கிராம சேவகர் பிரிவில் வெள்ள அனர்த்த தடுப்பு வடிகான் அமைப்பதற்கு ஆசிய வங்கியின் நிதி ஒதுகீட்டில் 16.5 மில்ல