குர்திஸ்தானின் கேர்குக் நகர் மீது ஈரானின் உதவியுடன் ஈராக் தாக்குதல்! இன்னுமொரு இனவழிப்பு நிகழும் அபாயம்!

ஒக்டோபர் 16, 2017

குர்திஸ்தான் மக்களின் வரலாற்று நகரங்களில் ஒன்றான எண்ணெய் வளம் மிக்க கேர்குர் நகர் மீது ஈரானிய துணைப்படைகளின் உதவியுடன் பெரும் வலிந்த தாக்குதல் ஒன்றை ஈராக்கிய படைகள் தொடங்கியுள்ளன.

கற்றுசா உந்துகணைகள், ஆட்லறி எறிகணைகள் சகிதம் நேற்று நள்ளிரவு கேர்குக் நகர் மீது ஈராக் தொடுத்த வலிந்த தாக்குதல் நடவடிக்கையில் ஈரானின் சியா துணைப்படைகள் உட்பட ஒரு இலட்சம் வரையான துருப்புக்கள் ஈடுபட்டிருப்பதாக குர்திஸ்தானில் இருந்து சங்கதி-24 இணையத்திற்குக் கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ் வலிந்த தாக்குதலை எதிர்கொண்டு குர்திஸ்தானின் பெஸ்மேகா போர்வீரர்கள் களமாடி வருவதாகவும், இது வரை நிகழ்ந்த மோதல்களில் அறுபது குர்தி வீரர்கள் வீரச்சாவெய்தியும்;, மேலும் முப்பது குர்தி வீரர்கள் காணாமல் போயும் இருப்பதாகவும் அதிகாரபற்றற்ற வட்டாரங்களை மேற்கொள் காட்டி சங்கதி-24 இணையத்தின் குர்திஸ்தான் தொடர்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

(குர்தி படை வீரர்களுடன் யுத்த களமுனைக்குச் செல்வதற்கு தயாராகும் குர்தி மக்கள்)

தனது சொந்த மக்களுக்கு எதிராக ஈராக் போர் தொடுப்பதை சதாம் உசேனின் வீழ்ச்சியின் பின் அமெரிக்காவின் தலைமையில் உருவாக்கப்பட்ட அந்நாட்டின் அரசியலமைப்பு தடை செய்யும் நிலையில், அதனையும் மீறி கேர்க்குக் நகர் மீது வலிந்த தாக்குதலை ஈரானிய துணைப்படைகளின் உதவியுடன் ஈராக் தொடுத்திருப்பது கேர்குக்கில் இன்னுமொரு இனவழிப்பு நிகழும் அபாயத்தைத் தோற்றுவித்துள்ளது.

இதனிடையே ஈரானிய துணைப்படைகளினதும், ஈராக்கிய ஆயுதப் படைகளினதும் தாக்குதல்களுக்கு அஞ்சி கேர்குக் நகரை விட்டு குர்திஸ்தானின் ஏனைய மாகாணங்களான எர்பில், சுலைமானியா ஆகியவற்றை நோக்கிப் பெரும் எண்ணிக்கையிலான குர்தி மக்கள் இடம்பெயர்ந்து வருவதாக குர்திஸ்தானில் உள்ள சங்கதி-24 இணையத்தின் தொடர்பாளர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

படங்கள்: Kurdistan24.net

செய்திகள்
ஞாயிறு யூலை 15, 2018

பனாமா ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப்புக்கு 10 ஆண்டும்  அவரது மகள் மரியம் நவாசுக்கு 7 ஆண்டும் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

ஞாயிறு யூலை 15, 2018

எகிப்து நாட்டில் ஒரு போலீஸ்காரரும்  ஒரு பாதுகாவலரும் படுகொலை செய்யப்பட்ட வழக்கை நைல் நதி நகரமான எல் ஜகாஜிக்கில் உள்ள கிரிமினல் கோர்ட்டு விசாரித்தது.