குளோபல் கேம் சேஞ்சர்’ பட்டியலில் அம்பானிக்கு முதலிடம்

May 17, 2017

தங்களது தொழிற்சாலைகளை கொண்டு பலபேரின் வாழ்வை மாற்றியமைத்ததாக போர்பஸ் பத்திரிக்கையின் ‘குளோபல் கேம் சேஞ்சர்’ பட்டியலில் இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார்.

துணிச்சலான தொழிலதிபர்கள், தங்களது தொழிற்சாலைகளை கொண்டு பல்லாயிரக்கான ஊழியர்களின் வாழ்க்கையை மாற்றியமைத்தவர்கள் போன்ற அடிப்படைகளை கொண்டு போர்பஸ் பத்திரிக்கையானது  ஆண்டு தோறும் ’குளோபல் கேம் சேஞ்சர்’ என்ற பெயரில் பட்டியல் வெளியிட்டு வருகின்றது.

நடப்பாண்டுக்கான இரண்டாவது பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், இந்தியாவைச் சேர்ந்த முக்கிய தொழிலதிபர் முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார். ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவராக இருக்கும் அம்பானி, எண்ணெய் சுத்திகரிப்பு, தொலைத்தொடர்பு துறை, எரிவாயு  போன்ற தொழில் சந்தைகளில்  கொடி நாட்டி வருகிறார்.

சமீபத்தில் இந்நிறுவனத்தின் சார்பில் வெளிவந்த ‘ஜியோ’ தொலைத்தொடர்பு சந்தையில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது முக்கிய காரணமாகும். 25 பேர் கொண்ட இப்பட்டியலில் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் வளைகுடா நாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்கள் இடம் பெற்றுள்ளனர்.

செய்திகள்