கூகுள் நிறுவனத்தில் பாலின பாகுபாடா?

August 08, 2017

கூகுள் நிறுவனத்தில் ஆண்-பெண் பாகுபாடு காட்டப்படுவதாக கூறிய அந்நிறுவனத்தின் பொறியாளர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் டெக் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேடு பொறியான கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட்டில் பொறியாளராக பணிபுரிபவர் ஜேம்ஸ் டாமோர். இவர் கடந்த வாரம் நிறுவனத்தின் நடக்கும் பாலின பாகுபாடு குறித்து அறிக்கை ஒன்றை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில் நிறுவனத்தில் ஆண்-பெண் பாகுபாடு அதிகம் பார்க்கப்படுகிறது. பெண்களுக்கு தொழில்நுட்பத்துறை மற்றும் தலைமை பொறுப்பு போன்ற பதவிகளை கொடுக்க மறுக்கின்றனர் என காரசாரமாக எழுதியிருந்தார்.

ஜேம்ஸ் டாமோரின் இந்த மெமோ டெக் உலகில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஜேம்ஸ் நிறுவனத்தின் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக அவரை வேலையை விட்டு நீக்கியது கூகுள். அவர் நிறுவனத்திடம் முறைப்படி இந்த பிரச்சனைக்கான தீர்வு காண தொடர்புகொண்டுள்ளார். அதற்கு கூகுள் நிறுவனம் ஊழியர்களின் தனிப்பட்ட பிரச்சனைகளை பற்றி பேச முடியாது என கூறிவிட்டது.

இது குறித்து கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை கூறுகையில், ஜேம்ஸ் அனுப்பிய அறிக்கையில் நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு எதிராக மற்றும் பாலின வேறுபாட்டை பற்றி வரம்பு மீறி எழுதியுள்ளார் அதனால் அவரை பதவி நீக்கம் செய்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும், அந்நிறுவனத்தின் துணை தலைவர் டெனிலே பரவுன் ,” ஜேம்ஸ் நிறுவனத்தில் ஆண்-பெண் பாகுபாடு காட்டுவதாக தவறாக நினைத்து கொண்டிருக்கிறார். இங்கு அது போன்று எந்த பாகுபாடும் காட்டுவதில்லை” என தெரிவித்துள்ளார். 

செய்திகள்
சனி ஒக்டோபர் 21, 2017

குர்திஸ்தான் தலைநகர் எர்பில் நோக்கி ஈரானிய துணைப்படைகளின் உதவியுடன், கவச ஊர்திகள் சகிதம் வெள்ளிக்கிழமை ஈராக்கிய படைகள் முன்னெடுத்த வலிந்த படையெடுப்பு முறியடிக்கப்பட்டிருப்பதாக குர்திஸ்தான் மாநில பா

வெள்ளி ஒக்டோபர் 20, 2017

வடகொரியாவுக்குப் போர் மிரட்டல் விடுப்பது அமெரிக்காவுக்குத் தான் பேராபத்து என்று ஹிலாரி கிளின்டன் தெரிவித்துள்ளார்.வடகொரியா அமெரிக்காவை குறிவைத்து அவ்வப்போது அணு ஆயுதம் மற்றும் ஏவுகணைச் சோதனையைநடத்த

வெள்ளி ஒக்டோபர் 20, 2017

நியூசிலாந்தின் புதிய பிரதமராக தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த ஜெசிந்தா அர்டென் பதவியேற்க உள்ளார். மிகக்குறைந்த வயது பெண் பிரதமர் என்ற பெருமையைப் பெறும் ஜெசிந்தாவுக்கு வயது 37.

வெள்ளி ஒக்டோபர் 20, 2017

தமது வரலாற்று வாழ்விடங்களான கேர்க்குக், கணாக்கின் ஆகிய நகரங்களை ஆக்கிரமித்திருக்கும் ஈரானிய - ஈராக்கிய ஆயுதப் படைகளுக்கு எதிராக நிராயுதபாணிகளான குர்தி மக்கள் தமது உயிரைத் துச்சமென மதித்துக் கிளர்ச்

வியாழன் ஒக்டோபர் 19, 2017

குர்திஸ்தானின் கேர்குக் நகரையும், அதனை அண்டிய பகுதிகள் சிலவற்றையும் ஆக்கிரமித்திருக்கும் ஈராக்கிய - ஈரானிய படைகளால் நிராயுதபாணிகளான குர்தி வீரர்களும், பொதுமக்களும் அடித்தும், வெட்டியும் படுகொலை செய

வியாழன் ஒக்டோபர் 19, 2017

எங்கள் நாட்டின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அந்த நாட்டின் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த தயங்க மாட்டோம்