கூட்டமைப்புத் தலைவர்கள் கொழும்பில் கூடவுள்ளனர், அரசியலமைப்பு தொடர்பாக ஆராய்வர்

January 02, 2017

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் கூட்டம் கூட்டப்படும்போது புதிய அரசியலமைப்பு தொடர்பாக ஆராயவுள்ளதாக கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். 

கொழும்பில் எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் தொடர்ந்து மூன்று நாள்கள் இந்தக் கூட்டம் இடம்பெறும் என்றும் அவர் கூறினார். 

இது தொட்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் 9, 10, 11 ஆம் திகதிகளில் நாடாளுமன்றம் கூடவுள்ளது. இதற்கு முன்னதாக நாங்கள் கூடி புதிய அரசியலமைப்புத் தொடர்பாக ஆராயவுள்ளோம். 

6 ஆம் திகதி முதல் தொடர்ந்து மூன்று நாட்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கூடி கலந்தாலோசிக்கவுள்ளோம்.  

இந்தக் கலந்துரையாடலுக்கு, சுரேஷ் பிரேமசந்திரன் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் சுட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் சுட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.   

இது குறித்து, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரன் கருத்துத் தெரிவிக்கையில், 

புதிய அரசியலமைப்பு தொடர்பாக ஆராய்வதற்கு கூடவுள்ள கலந்துரையாடலுக்கு எமக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இக்கலந்துரையாடலில் நாம் நிச்சயம் கலந்துகொள்வோம் என்றார். 

செய்திகள்
புதன் March 29, 2017

 ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேனவுக்கு போட்டியாக அச்சுறுத்தலாக இருக்கமாட்டார்.