கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தனின் ஒற்றையாட்சி அரசமைப்புக் கோரிக்கையை நிறைவேற்ற அரசு முயற்சிக்கும்!

யூலை 12, 2018

மாகாண சபை தேர்தலுக்கு முன்னர் புதிய அரசியலமைப்பு அவசியம்  என்ற  எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனின் கோரிக்கையை நிறைவேற்ற அரசாங்கம் முயற்சிக்கும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

 மாகாண சபை தேர்தலுக்கு முன்னர் புதிய அரசியலமைப்பு அவசியம் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பவந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். ஆகவே அவரது கோரிக்கையினை நிறைவேற்ற அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்ளும். முடியுமாகவிருந்தால் அதனை நடமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்போம் என்றார். 

இதேவேளை புதிய அரசமைப்பு ஒற்றையாட்சியை மையப்படுத்தியதாகவும் பௌத்தத்திற்கு முன்னுரிமை அளிப்பதாகவும் இருக்கும் என வெளிப்படையாகக் கூறப்பட்டுள்ள நிலையிலும் சம்பந்தர் அதற்கு ஆதரவு அளித்து வருகின்றார். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முற்றுமுழுதாக அதை ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த நிலையில், அனைவரின் ஒப்புதலுடன் இதை நிறைவேற்ற அரசு துடித்துக்கொண்டிருக்கின்றது. 

 

செய்திகள்
திங்கள் யூலை 23, 2018

 பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு உடனடியாக விமான சேவைகள் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் விமான நிலையம் தற்போதுள்ள நிலையிலிருந்தே இந்தச் சேவை தொடங்கப்படும் எனவும்,