கூட்டமைப்பை கூட்டம் போட்டு ஏமாற்றிய இராணுவம்!

April 21, 2017

யாழ் மாவட்டத்தில் உயர்பாதுகாப்பு வலயத்தில் இருக்கின்ற 4000 ஏக்கர் காணியின் பலாலி விமான நிலையத்தினை சூழ்ந்த பகுதிகள் விடுவிக்கப்படுத்தல் தொடர்பில் எவ்விதமான முன்னேற்றகரமான பதில் எதுவும் இல்லை என்று தழிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ் மாவட்டத்தில் உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களின் காணிகளை விடுவிக்க வேண்டியும் மீள்குடியேற்றம் தொடர்பாக உயர்மட்டக்கலந்துறையாடல் இன்று யாழ் மாவட்ட செயலகத்தின் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது.

 

கூறித்த கலந்துறையாடலுக்கு தழிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களாகிய எம்.ஏ.சுமந்திரன்,சோ.மாவை சேனாதிராஐh,ஈ.சரவணபவன்,அ.சித்தார்த்தன், சி.சிறிதரன் ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.  இதில் விடுவிக்கப்படவேண்டிய இடங்களில் இராணுவத்தினர் மக்களின் காணிகள் இருப்பது தொடர்பான விடையங்கள்,மற்றும் விடுவிக்கப்பட இருக்கும் சில பகுதிகள்,அரச,தனியார் காணிகளின் தற்போதைய நிலைமைகள்,தற்போது மீளக்குடியேறிய மக்களுக்கான திட்டங்கள்,எனைய இதர தேவைகள் தொடர்பிலும் இங்கு கலந்துறையாடப்பட்டன. 

 

இதன் பின்ன ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் யாழ் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் பலாலி நிலையத்தில் உள்ள விஸ்தரிப்பு மற்றும் விஸ்தரிப்பாக இருந்தால் அவை விஸ்தரிப்பு இருந்தால் தேவைப்படுகின்ற காணிகள் எவ்வளவு மேல் மட்டத்திலே பேசவேண்டி இருக்கின்றது. அது தொடர்பான தரவுகளும் மக்களுடன் சென்று கலந்துறையாட்டவேண்டியுள்ளது. சர்வதேச பிராந்திய விமானநிலையமாக விஸ்தரிப்பாக மாற்ற இருந்தால் தனியார் காணிகள் சூபீகரிக்கப்படவேண்டிய தேவைகள் இருக்கின்றது. அதற்கான மாற்றவழிகளை பயன்படுத்தலாமா?அதற்கான தீர்க்கமான முடிவு எடுக்கவேண்டும். மிகுதி பேச்சு வார்த்தையினை படைத்தரப்பிடம் நடாத்த தயார் என்று அவர் தெரித்தார். 

 

தனியார் காணிகளை விடுவிக்கவேண்டிய இடங்களை நாம் அடையாளம் கண்டுள்ளோம். சில இடங்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்து இருப்பதாக இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர். சில இடங்களில் காணிகள் சுபீகரிப்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகி இன்னும் முடியாமல் இருக்கின்றது. அது சம்பந்தமாக அவர்கள் இறுதி நடவடிக்கை எடுக்கவேண்டியுள்ளது. இதனை ஒவ்வொரு பிரதேச செயலாளர்கள் நாங்கள் பணித்து இருக்கின்றோம் தனியார் காணிகளை சுபீகரிக்கும் நடவடிக்கையினை ஈடுபடும் போது அதில் உள்ள அரச காணிகளில் இம் மக்களுக்கான காணிகள் வழங்கப்படவேண்டும் என்ற விடையத்தினை நாங்கள் அரசாங்க அதிபருக்கு பணித்துள்ளோம் என்று எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்

 

மேலும் போர் நிறைவடைந்த நிலையில் 27 ஆயிரம் ஏக்கர் காணிகள் இராணுவத்தினரின் பயன்பாட்டில் யாழ் மாவட்டத்தில் காணிகள் இருந்துள்ளதாகவும்.அது தற்போது 4700 ஏக்கராக மாறியுள்ளதாகவும் எனைய இடங்கள் மக்களுக்கு வழங்கியுள்ளதாகவும் இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர் என்றும்  எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.இதில் பலாலி விமானத்தளமும் அடங்கி இருக்கின்றது. யாழ் வலி வடக்கு பி;ரதேச செயலாளர் பிரிவில்  12 000 எக்கர் காணிகள் இருந்தது அதிலும் சில பகுதிகள் விடுக்கப்பட்டுள்ளன.

 

இந்த புதிய அரசாங்கத்தில் நாங்கள் இணங்கி கொண்ட விடையம் ஒன்று வடக்கில் உள்ள மக்களில் தனியார் காணிகள் அனைத்து விடுவிக்கப்படவேண்டும் என்ற நோக்கில் தான் நாங்கள் அரசாங்கதுடன்சில விடையங்களில் இணைந்து செயற்படுகின்றோம்.அதன் அடிப்படையில் எமக்கான  வாக்குறுதியினை ஐனாதிபதி அவர்கள் தந்து இருக்கின்றார். அதன் திட்டங்கள் தற்போது சென்று கொண்டு இருக்கின்றது. யாழ் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இந்த மாவட்ட ரீதியாக இடம்பெறுகின்ற கூட்டங்களுக்கு பின்னரும் நாங்கள் அரசியல் தலைவர்களுடன் இறுதியாக இடம்பெறும் உயர்மட்டகலந்துறையாடல் தான் மிகவும் முக்கியமாக இருக்கும்.அதில் அதான் அரசாங்கத்தில் முடிவுகளை எடுக்கின்ற கலந்துரையாடலாக இருக்கும் என்று யாழ் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இதில் யாழ் மாவட்ட காணி மேலதிக செயலாளர் எம்.முரளிதரன்,மற்றும் யாழ் மாவட்ட 15 பிரதேச செயலாளர்கள்,பாதுகாப்பு படைத்தலைமை உயர் அதிகாரிகள்,மீள்குடியேற்ற செயற்றிட்ட அதிகாரிகள்,பலரும் கலந்து கொண்டனர். 

இணைப்பு: 
செய்திகள்
செவ்வாய் March 20, 2018

ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீரவுக்கு எதிர்வரும் 22 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்க மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.