கேஎப்சி உணவு விடுதிக்குள் மனிதகழிவுகள் கொட்டி போராட்டம்!

ஞாயிறு செப்டம்பர் 06, 2015

இலங்கையில் நடந்ததாக கூறும் மனித உரிமை மீறல் பற்றின விசாரணையை இலங்கையே விசாரிக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் நிலைபாட்டை 100 மணிநேரத்தில் திரும்ப பெற வேண்டியும் இலங்கையில் சர்வதேச சுதந்திர இனப்படுகொலை விசாரணையை கொண்டு வரவேண்டியும்  கடந்த 01.09.2015 அன்று   சென்னை அமெரிக்க தூதரகத்தில் மனு மற்றும் எச்சரிக்கை கடிதம் கொடுக்கப்பட்டது.

 

இதற்கு எந்தவித பதிலையும் அமெரிக்க தூதரகம் அளிக்கவில்லை.

 

இன்று  மாணவர்கள் கொடுத்த 100 மணிநேர‬ கெடு முடிந்ததும் சென்னை அசோக் நகரில் உள்ள ‎உலகபுகழ்பெற்றஅமெரிக்கா‬ நிறுவனமான  கேஎப்சி (Kfc ) உணவு விடுதியை முற்றுகையிட்டு  மனித உயீர்களை மதிக்காமல் சிங்கள அரசிற்க்கு துணையாக இருக்கும் அமெரிக்கா அரசை கண்டித்து ‪  கேஎப்சி (Kfc ) நிறுவனத்திற்க்குள் மனிதகழிவுகள்‬ மற்றும் தேவையற்ற குப்பைகளை கொட்டி போராட்டம் ஒன்றை நடத்தினர். இது கொஞ்சம் வித்தியமான போராட்டமாக அமைந்தது. போராட்ட இடத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட ‎இளையதலைமுறை‬ கட்சி மற்றும் மறுமலர்ச்சி நாம் தமிழர் இயக்கத்தினரை கைது செய்தனர்.