கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யேர்மன் வெளிவிவகார அமைச்சிடம் மனு

சனி நவம்பர் 14, 2015

அரசியல்- மற்றும் போர்கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யேர்மன் வெளிவிவகார அமைச்சிடம் மனு கையளிக்கப்பட்டது .பல ஆண்டுகளாக  அரசியல்- மற்றும் போர்க்கைதிகளாக  சிங்கள பேரினவாத அரசின் சிறைகளில் வாடும் எங்கள் உறவுகள் தமது விடுதலையை வலியுறுத்தி   சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தில்  ஈடுபட்டுவருகின்றனர். 

அவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் அவர்களது உடனடியான விடுதலையை வலியுறுத்தியும் தாயகத்தில்  இன்று நடாத்திய முழுமையான கடையடைப்பு மற்றும் பணிப்புறக்கணிப்பு போராட்டம்  வெற்றிகரமாக  நடைபெற்றுள்ளது . 

அந்தவகையில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையின்  சார்பாக   எமது உறவுகளின் விடுதலையை வலியுறுத்தி யேர்மன் வெளிவிவகார அமைச்சிடம் , யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை ஊடாக  மனு   கையளிகப்பட்டுள்ளது.