கைதிகளுக்காக கிளிநொச்சியிலும் போராட்டம், அங்கும் இயல்புவாழ்க்கை முடங்கியது

ஒக்டோபர் 13, 2017

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில்  முன்னெடுக்கப்பட்டுவரும் ஹர்த்தால் காரணமாக கிளிநொச்சி மாவட்டமும் முற்றாக முடங்கியுள்ளது. 

அங்கு பாடசாலைகள், வங்கிகள், வர்த்தக நிலையங்கள், அரச திணைக்களங்கள், தனியார் நிறுவனங்கள் எவையும் இயங்கவில்லை. உள்ளுர், வெளியூர் போக்குவரத்துக்களும் இடம்பெறவில்லை. 

கைதிகளின் உறவினர்களும் பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இணைந்து அங்கு போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்துள்ளனர். கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்று (13) காலை இப்போராட்டம் இடம்பெற்றது. 

இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். 

இணைப்பு: 
செய்திகள்