கைதிகளை விடுவிக்குமாறு சம்பந்தன் ஜனாதிபதிக்கு கடிதம்

ஒக்டோபர் 12, 2017

'பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை தாமதமின்றி விடுதலை செய்யுங்கள்' 

இவ்வாறு, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

இது தொடர்பாக சம்பந்தன் இன்று (12) ஜனாதிபதிக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். 

தமது வழக்குகளை வவுனியா நீதிமன்றில் இருந்து அநுராதபுரம் நீதிமன்றுக்கு மாற்றியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள மூன்று கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இன்றுடன் 18 ஆவது நாளாக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அவர்களின் உடல் சோர்வடைந்துள்ளது. 

இந்த விடயம் தொடர்பாக இதுவரை மௌனமாக இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைமை இன்று கடிதம் எழுதியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

செய்திகள்
வெள்ளி February 23, 2018

9 வருடங்களின் பின்னர் இன்று (23) நடைபெற்ற தேசிய ஒலிம்பிக் குழுத் தேர்தலில் தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவராக சுரேஸ் சுப்ரமணியம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

வெள்ளி February 23, 2018

அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியிருந்த சாந்தரூபன் என்ற அகதி அங்கிருந்து நாடு கடத்தப்பட்டு சிறிலங்காவை வந்தடைந்ததாக தகவல் கிடைத்துள்ளது.