கைது செய்வதற்கு தடை உத்தரவு பிறப்பிக்க கோரிக்கை!

May 16, 2018

 இரகசிய காவல் துறையால் தான் கைது செய்யப்படுவதை தடை செய்து உத்தரவிடுமாறு கோரி எவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். 

காவல் துறை மா அதிபர், இரகசிய  காவல் துறை  மற்றும் சட்ட மா அதிபர் உள்ளிட்டவர்கள் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். 

காலி துறைமுகத்தில் மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலையை நடத்திச் சென்ற சம்பவத்தில் தன்னை கைது செய்து விளக்கமறியலில் வைப்பதற்கு இரகசியகாவல் துறை  முயற்சிப்பதாக நிஸ்ஸங்க சேனாதிபதி தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். 

தனக்கு எதிராக இரகசிய காவல் துறை விசாரணை செய்துள்ள விதம் தன்னிச்சையான மற்றும் சட்டவிரோதமான முறையில் இருப்பதாகவும், இதனூடாக தனது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் அவர் தனது மனுவில் கூறியுள்ளார். 

இதன் காரணமாக தனக்கு எதிரான விசாரணை ஊடாக தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது என்றும், தன்னை கைது செய்வதற்கு தடை விதித்தும் உத்தரவிடுமாறு நிஸ்ஸங்க சேனாதிபதி உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

செய்திகள்
திங்கள் யூலை 16, 2018

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு சிகிச்சைகளுக்காக வெளிநாட்டிற்கு செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.தேர்தல் காலத்தில் அரச நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பில், ம

திங்கள் யூலை 16, 2018

இலங்கையில் இன்று ஜனநாயகம் இழக்கப்பட்டு சர்வாதிகாரமும் இராணுவஆட்சியும் தலைதூக்குமா என்ற விவாதம் எழுந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

திங்கள் யூலை 16, 2018

சீரற்ற காலநிலை காரணமாக மும்பாய் மற்றும் டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த இரு பயணிகள் விமானங்கள் மத்தள விமான நிலையத்திற்கு திருப்பியனுப்பட்டுள்ளது.