கொரிய தீபகற்பத்தில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கலாம்

May 11, 2017

சீன அதிபர் ஜி ஜின்பிங் தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னிடம் கூறியதாக சீன அரசு ஊடகம் வெளியிட்ட செய்தியில், “கொரிய தீபகற்பத்தில் நிலவும் பதற்றத்தை பேச்சு வார்த்தை மூலம் தீர்க்க சீனா உறுதி கொண்டுள்ளது.

 கொரிய தீபகற்பத்தில் அமைதி மற்றும் வளர்ச்சி ஏற்பட தென்கொரியா உட்பட அனைத்து தரப்புடனும் சீனா ஒத்துழைக்க விரும்புகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக வடகொரியா தொடர் அணுஆயுத சோதனைகளுக்கு எதிராக சீனாவும், அமெரிக்காவும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. மேலும் இது தொடர்பாக வடகொரியாவுடன் சீனா தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வந்தது. ஆனால் சீனாவின் இந்த முயற்சிக்கு வடகொரியா செவி சாய்க்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

செய்திகள்