கொலைக்களம் திரையிட்டதாக குற்றம்!

புதன் பெப்ரவரி 22, 2017

சனல்- 4 தொலைக்காட்சி எடுத்த போர் தவிர்ப்பு வலயம், இலங்கையின் கொலைக்களம் என்ற விவரணப்படத்தை மலேசியாவில் திரையிட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட மனித உரிமை ஆர்வலர் லீனா ஹென்றியின் வழக்கு நேற்று (21) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணையின் போது, லீனா ஹென்றி குற்றவாளி என மலேசிய நீதவான் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மலேஷியாவின் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களில் ஒருவரான லீனா ஹென்றிக்கு எந்த தண்டனையும் அறிவிக்கப்படவில்லை.

இவரது தண்டனை தொடர்பில் அடுத்த மாதம் 22 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதவான் அறிவித்துள்ளார். சேலாங்கூரில் உள்ள சீன மண்டபம் ஒன்றில் 2013 ஆம் ஆண்டு ஜூலை 03 ஆம் திகதி குறித்த படத்தை லீனா மலேசியாவில் திரையிட்டு கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.