கொலைசெய்ய உளவு பார்த்தவர் கைது!

Monday August 20, 2018

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் கிருபானந்தனை கொலை செய்வதற்கு உளவு பார்ததாகக் கூறப்படும் ஒருவரை இன்று காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த நபரை இன்று புளுமென்டால் பகுதியில் வைத்து கைது செய்துள்ளதாக காவல் துறை மேலும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் குறித்த நபரிடம் மேலதிக விசாரணைகளை புளுமென்டால் காவல் துறையினர்  மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது