கொள்ளுப்பேரன் திருமணத்தை நடத்தி வைத்தார் கருணாநிதி!

ஒக்டோபர் 30, 2017

சென்னை கோபாலபுரத்தில் தனது கொள்ளுப்பேரன் மனோரஞ்சித், நடிகர் விக்ரம் மகள் அக்‌ஷிதா திருமணத்தை கருணாநிதி நடத்தி வைத்தார். தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.முத்து- சிவகாம சுந்தரியின் மகள் வழிப்பேரனும், கெவின்கேர் நிறுவனத்தலைவர் சி.கே. ரங்கநாதன்-தேன்மொழி தம்பதியின் மகனுமான மனோரஞ்சித்துக்கும், நடிகர் விக்ரம்- சைலஜா தம்பதியின் மகள் அக்‌ஷிதாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இவர்களின் திருமணம் சென்னை கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியின் வீட்டில் இன்று காலை நடைபெற்றது. திருமணத்தில் கருணாநிதி மற்றும் நடிகர் விக்ரம் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர். அரசியல் கட்சியினர் யாரும் பங்கேற்கவில்லை.

கருணாநிதியின் வீட்டின் முகப்பில் வாழை மரம் கட்டப்பட்டு மலர் தோரணங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மங்கள வாத்தியம் இசைக்கப்பட்டது. காலை 9.50 மணியளவில் மணமகள் அக்‌ஷிதாவை கோபாலபுரம் இல்லத்துக்கு நடிகர் விக்ரம் காரில் அழைத்து வந்தார். மணமகளுக்கு மாலை அணிவித்து உள்ளே அழைத்து சென்றனர். காலை 10 மணியளவில் மணமகன் மனோரஞ்சித் வந்தார். அவருக்கு மாலை அணிவித்து வரவேற்று அழைத்து சென்றனர்.

மணமக்கள் கருணாநிதியின் காலில் விழுந்து ஆசி பெற்றனர். 10.25 மணிக்கு கெட்டி மேளம் முழங்க தமிழ் முறைப்படி கருணாநிதி திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.

திருமண விழாவில் மு.க.அழகிரி, காந்தி அழகிரி, செல்வி குடும்பத்தினர், மு.க.தமிழரசு, ராஜாத்தி அம்மாள், கனிமொழி, துர்கா ஸ்டாலின், தயாநிதிமாறன், கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் அமிர்தம், முரசொலி செல்வம், கவிஞர் வைரமுத்து மற்றும் மணமக்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

திருமணம் முடிந்ததும் கருணாநிதியை வீல்சேரில் வைத்து வாசலுக்கு அழைத்து வந்தனர். வெளியில் கூடியிருந்த பத்திரிகையாளர்கள், பொதுமக்களை பார்த்த பிறகு மீண்டும் உள்ளே அழைத்து சென்றனர்.

உடல்நலக்குறைவால் கருணாநிதி கடந்த ஒரு ஆண்டாக ஓய்வு எடுத்து வந்தார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5-ந்திகதி கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் அமிர்தம் மணிவிழாவில் கருணாநிதி கலந்து கொண்டார். அதன்பிறகு அவர் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை.

ஒரு வருடத்துக்கு பிறகு தற்போது கொள்ளுபேரன் திருமணத்தை நடத்தி வைத்துள்ளார்

இணைப்பு: 
செய்திகள்
ஞாயிறு January 14, 2018

தமிழக மக்களுக்கும், உலகுவாழ் தமிழர்களுக்கும் தைத் திருநாள் பொங்கல் வாழ்த்துக்கள்...

ஞாயிறு January 14, 2018

தமிழினத்தின் பாரம்பரியத் திருவிழாவான பொங்கல் திருவிழா நாளில் தமிழ்மக்கள் யாவருக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஞாயிறு January 14, 2018

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக்குடியாம் தமிழ் தேசிய இனத்தின் மற்றும் ஒரு புத்தாண்டு...

சனி January 13, 2018

நம் உயிரினும் மேலான தமிழ் மொழிக்கு கhலத்தால் அழியாத கhவியங்களை தந்த படைப்பாளிதான் கவிப்பேரரசர் வைரமுத்து அவர்கள் ஆவார்கள். தேனினும் இனிய பாடல்களை கலைத்துறைக்குத் தந்தார்.

சனி January 13, 2018

சிதம்பரம் தொடர்வண்டி மேம்பாலத்திற்கு மொழிப்போர் ஈகி (தியாகி) இராசேந்திரன் பெயர் சூட்ட வேண்டும் என கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக தமிழ்த்தேசியப் பேரியக்கமும், சிதம்பரம் தமிழ்க் காப்பணியும் இன்னும் பல