கொழும்பு-கண்டி அதிவேகப் பாதை திறக்கப்படும்!

January 11, 2018

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் கொழும்பு-கண்டி அதிவேகப் பாதை திறந்து வைக்கப்படுமென உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கனேமுல்ல மேம்பாலத்தை மக்கள் பாவனைக்காக இன்று (11) திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“ தற்போது கொழும்பு- கண்டி அதிவேகப் பாதையின் முதற்கட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதில் கடவத்தையிலிருந்து மீரிகம வரையான பகுதியை அமைக்கும் பணி சீன நிறுவனத்திடமும், மீரிகமயிலிருந்து குருநாகல் வரையான பகுதியை அமைக்கும் பணி தேசிய ஒப்பந்த நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் மூன்றாவது பகுதி பொத்துஹெரவிலிருந்து கலகெதர வரை ஜப்பான் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த அதிவேகப் பாதையானது 2020ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பு திறப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும்” அமைச்சர் குறிப்பிட்டார்.

செய்திகள்
வியாழன் March 22, 2018

ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் இருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் அமெரிக்காவின் ஹுஸ்டன் நகரை நோக்கி பயணிக்க முற்பட்ட நாமல் ராஜபக்ஷவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் கூறியுள