கொழும்பு மாளிகாவத்தையில் ஆயுதங்கள் மீட்பு ஆறுபேர் கைது!

Monday August 03, 2015

மாளிகாவத்தை கெத்தாராமைக்கு அண்மையில் இன்று திங்கட்கிழமை அதிகாலை வீதிச்சோதனை சாவடியை அமைத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது வெள்ளை நிற டிஃபென்டர்  ரக வாகனத்தை கறுப்பு நிறத்திலான இறப்பர் சீட்டினால் மூடி அதற்குள் மறைத்துவைத்து ஆயுதங்களை கடத்திய அறுவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

அந்த வாகனத்துக்குள்ளிருந்து இரண்டு கைக் கோடரிகள், அகலக்குழாய்கள், இரும்பு மற்றும் அலுமினிய குழாய்கள் இரண்டு, கத்தி ஒன்றும் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.<கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளில் தாங்கள் களனியைச்சேர்ந்தவர்கள் என்றும் கொழும்பில் உள்ள விருந்தகமொன்றுக்கு செல்வதாகவும் தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்