கொழும்பை வந்தடைந்த நியூ காஸ்ரல்!

Tuesday November 14, 2017

அவுஸ்திரேலிய கடற்படைக்குச் சொந்தமான நியூ காஸ்ரல் என்ற கப்பல், கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.  184 பேர் பணியாற்றும் இக் கப்பல், 4200 டன் கொள்ளளவு கொண்டதாகும்.  கொழும்பு வந்த இந்தக் கப்பலை, இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்றனர். 

இங்கு 04 நாட்கள் தரித்திருக்கவுள்ள இக்கப்பலின் சிப்பந்திகள் இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்படவுள்ள பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளனர்.